Header Ads



கட்சியில் சேரமறுத்த மனைவியை விவாகரத்துசெய்த கணவன் - மலேசியாவில் சம்பவம்

தான் சார்ந்துள்ள கட்சியில் இணையாத மனைவியை விவாகரத்து செய்துள்ளார் மலேசிய அரசியல்வாதி. மலேசியாவில் உள்ள பழமைவாத கட்சியை (பி.ஏ.எஸ்.,) சேர்ந்தவர் இப்ராகிம். வயது 78.

முதல் மனைவி இறந்து விட்டதால் 14 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியை ஹஸ்னா, 61 என்பவரை திருமணம் செய்து கொண்டார். பி.ஏ.எஸ்.,கட்சியின் தீவிர ஆதரவாளரான இப்ராகிம், வீட்டுக்கு வந்ததும் தான் சார்ந்துள்ள கட்சியைப் பற்றி புகழ்ந்து பேசுவார். அதுமட்டுமல்லாது இந்த கட்சியில் இணையும்படி மனைவி ஹஸ்னாவை வற்புறுத்துவார்.

ஆளும் பரிசான் கட்சியின் தீவிர ஆதரவாளர் ஹஸ்னா. எனவே, அவர் பி.ஏ.எஸ்.,கட்சியை ஆதரிக்க மறுத்து விட்டார். இதனால், கோபமடைந்த இப்ராகிம், மனைவி ஹஸ்னாவை விவாகரத்து செய்து விட்டு முதல் மனைவியின் பிள்ளைகளுடன் சென்று வசிக்கிறார்.

No comments

Powered by Blogger.