Header Ads



கிலாரி கிளிண்டன் தப்பினார் - பழியை ஈரான் மீது போடவும் சதி

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, தற்கொலைப்படை உதவியுடன் அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ரேடியோ வெளியிட்டுள்ள அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இஸ்ரேலிற்கு வருகை தரும் அமெரிக்க அமைச்சர் ஹிலாரியை கொ‌லை செய்வதாகவும், பின் பழியை ஈரான் மீது போட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்‌டுள்ளது. அமெரிக்காவும் இந்த தகவலை உறுதிசெய்துள்ளது. எந்த அமைப்பு, இந்த சதித்திட்டம் தீட்டியது என்ற விசாரண‌ை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.