Header Ads



இலங்கையில் முதலீடு செய்யுமாறு அமைச்சர் றிசாத் மலேசியர்களுக்கு அழைப்பு

 இர்ஷாத் றஹ்மத்துல்லா

இலங்கைக்கும் மலேசியாவுக்குமான உறவு வலுவானதாக உள்ளது இந்த நிலையில் இருதரப்பு வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்த புதிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய முன்வருமாறு கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மலேசிய நாட்டின் வர்ததக பிரதி நிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

நேற்று வியாழக்கிழமை அமைச்சரை அமைச்சில் சந்தித்த இலங்கைகான மலேசிய உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுதீன் தலைமையிலன குழுவினரிடத்திலேயே இந்த வேண்டுகோளை அமைச்சர் விடுத்தார்.

தற்போது இலங்கை வர்த்தக முக்கியத்துவமிக்க இடமாக நோக்கப்படுவதால்,சிறந்த உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாறியுள்ளது. இலங்கையில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு வெளிறாட்டு சந்தையில் சிறந்த கேள்வி காணப்படுகின்றது.

அதே போல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சற்றுலாத் துறைக்கு போதுமான வசதிகளை கொண்ட இடமாக அடையாளப்படுத்தப்படுகின்றத என்று சுட்டிக்காட்டிய அமைச்சர்,மலேசிய முதலீடுகளை இப்பகுதியில் மேற்கொள்வதனால் இப்பகுதி நன்மையடையும் என்றும் கூறினார்.

இலங்கையில் புதிய திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கு தமது நாட்டு வர்த்தக சமூகம் ஆவலாக இருப்பதால் இக்குழுவில் அங்கம் வகித்த தேசிய வர்த்தக சம்மேளத்தின் மலேசிய  நாட்டின் தலைவர் செய்த் அலி அலட்டஸ் தமது வர்த்தக குழுவொன்றினை இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் கூறினார்.

இந்த குழுவில் மலேசிய பசுபிக் கூட்டுததாபன நிறைவேற்று பணிப்பாளர் செய்த் ஹூசைன் அல் ஹப்ஸி, ஸ்ரீ எம் எஸ் குரூப் முகாமைத்துவ பணிப்பாளர் வீ.எம்.முத்துசாமி,உட்பட பலரும் இடம் பெற்றிருந்தார்.



No comments

Powered by Blogger.