வங்குரோத்தான கிறீஸ் நாட்டில் முதலிட்டு நட்டத்தைதேடிய இலங்கை மத்திய வங்கி
நிதிரீதியாக பின்னடைவை எதிர்நோக்கியுள்ள ஐரோப்பிய நாடான கிரேக்கத்தின் கடன்பத்திர முறிகளில் முதலீடு செய்தமையிலான இலங்கை மத்திய வங்கி பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி 8.4 மில்லியன் யுரோக்களை, இலங்கை பெறுமதியில் 1.5 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டே குறித்த முதலீடுகள் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்ற பொது வர்த்தக குழுக்களின் கூட்டத்தின் போது, எதிர்கட்சியின் உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலாகவே இந்த தகவல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் கிரேக்க நாட்டின் கடன்பத்திர முறிகளில் எவ்வளவு நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது என எதிர்கட்சியினர் கேட்டிருந்தனர்.
இது தொடர்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப் பட்டிருந்தது.
அதன்போது, மத்திய வங்கியின் முதலீடுகள் தொடர்பில் அனைத்து தகவல்களையும் வெளியிட முடியாது என தெரிவிக்கப்பட்டது.

Post a Comment