Header Ads



அரசியல்வாதிகள் வாயை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் - மைத்திரிபால சிறிசேன

அரசியல்வாதிகள் கருத்துக்கள் வெளியிடும் போது கவனம் செலுத்தவேண்டும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வாயிலிருந்து வெளியாகும் சொற்களை திரும்ப பெற்றுக்கொள்வது என்பது சிரமமான காரியம். எனவே அரசியல்வாதிகள் வாயை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட கூடும்.

அதேபோல் அரச அதிகாரிகளும் தமது வரையரைக்குள் வாயிலிருந்து வெளியாகும் சொற்களை கட்டுப்படுத்தி கொள்வது சிறந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.