Header Ads



எபோலா ஆட்கொல்லி வைரஸ் குறித்து எச்சரிக்கை

உகண்டாவில் எபோலா எனப்படும் ஒருவித ஆட்கொல்லி வைரஸ் பரவி வருவதாக எழுந்த தகவலால் அந்நாட்டு மக்கள்பீதியில் உறைந்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு அதிபர், பொதுமக்களை உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆப்ரிக்க நாடான உகண்டாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஒருவித வைரஸ் தாக்குதலால் நோய் தொற்று ஏற்பட்டு தலைநகர் கெம்பாலா மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி 14 பேர் இறந்துள்ளனர்.இவ்வைரஸிற்கு ‘எபோலா’ என பெயரிட்டுள்ளனர்.

இந்த ‌வைரஸ் தாக்கியவர்களை , கைகுலுக்கினாலோ, முத்தமிட்டாலோ, உடலுறவு வைத்தாலும் தொற்று நோய் ஏற்பட்டு 90 சதவீததம் இறப்பது உறுதி என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உகண்டாவில் மக்களிடையே எபோலா வைரஸ் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் யூவேரிமுசுவெய்னி, நேற்று டி.வி. வாயிலாக மக்களுக்கு கூறுகையில்,

ஏபோலா வைரஸ் வேகமாகபரவி தலைநகர் கெம்பாலாவிலும் பரவியுள்ளதால், உஷாராக இருக்குமாறு ‌அறிவுறுத்தியுள்ளார்.எபோலா வைரஸ் கடந்த 2000-ம் ஆண்டு பரவியதில் 425 பாதிக்கப்பட்டனர்.இவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாயினர் எனவும், இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு, இடைவிடாத காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும், பின்னர் சிறுநீரகத்தினை தாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.இதற்கு தற்போது எதிர்மருந்து கிடையாது என்பதால் உகண்டாவாசிகள் பீதியில் உறைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.