Header Ads



நெருப்புக் கோழி பறவையா..? விலங்கா..?? பாகிஸ்தானில் சூடான விவாதம்


பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில சட்டசபையில் ஒரு நூதன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், நெருப்புக்கோழி பறவை அல்ல. அது ஒரு விலங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பறவை போன்று அதனால் பறக்க முடியாது. எனவேஅது ஒரு விலங்கு என கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு வெற்றி பெற்றது. இதை பஞ்சாப் மாநிலம் ஏற்கனவே அறிவித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அறிவித்து இருந்தது. அதை ஏற்க மறுத்த அவர் கையெழுத்திட வில்லை.

எனவே, சட்டசபையில் தீர்மானம் இயற்றி அமோகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை குறித்து பாகிஸ்தான் சட்டமந்திரி ரானா சனா கூறும்போது, ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வரிசையில் நெருப்புக் கோழியையும் விலங்குகள் வரிசையில் கொண்டு வந்துள்ளோம். ஏனெனில் இங்கு இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளது. நெருப்பு கோழியின் இறைச்சியை உலகம் முழுவதும் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

எனவே, அதற்கு பண்ணை அமைத்து உற்பத்தியை பெருக்கி மக்களின் இறைச்சி தேவையை இதன்மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

No comments

Powered by Blogger.