முஸ்லிம் முதலமைச்சர் என்றோ தமிழ் முதலமைச்சரென்றோ பேசுவதில் அர்த்தமில்லை - அலிசாஹிர் மெளலானா
கிழக்கு மாகாணத்திலே தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஏறக்குறைய சமமான அளவில் வாழ்கிறார்கள். எனவே முஸ்லிம் முதலமைச்சர் என்றோ தமிழ் முதலமைச்சரென்றோ பேசுவதில் அர்த்தமில்லை. மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றோம். உடனிருந்து ஒருவரையொருவர் தங்கி வாழ்கின்றோம் என அலிசாஹிர் மெலானா தெரிவித்துள்ளார். இதகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
இந்த நிலையில் நிலைப்பாட்டிலே முஸ்லிம், தமிழர் என்ற இனபேதம் தேவையில்லையென்பதே எனது கருத்து. இன, மத, கட்சி பேதமின்றி பக்கச்சார்பின்றி, நேர்மையாக மக்கள் நலனுக்கு நிர்வாகம் நடத்தும் ஒரு திறமைசாலியே முதலமைச்சராக வரவேண்டும். அவர் தமிழ் மகனாகவோ முஸ்லிம் மகனாகவோ இருக்கலாம். இன அடிப்படையில் நாம் சிந்திக்கக் கூடாது. நமக்குள் ஒற்றுமை வேண்டும். இந்த யதார்த்தத்தை உணர்ந்து கிழக்கு மக்கள் செயல்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே மூவின மக்களும் ஒன்றிணைந்து வாழ்கின்றனர். இன ரீதியாக சிந்தித்து இந்த மாகாணத்தை முன்னேற்ற முடியாது.
Post a Comment