Header Ads



இத்தாலியில் இப்படியும் நடந்தது

மனைவி மிக அழகாக இருந்ததால் பொறாமையடைந்த கணவன் அவரை கத்தரிகோலால் குத்தி கொலை செய்துள்ளார்.இத்தாலியின் நேப்பிள்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜியான்கார்லோ,35. தொழிற்சாலை ஊழியர். இவரது மனைவி அலெஸ்சான்ட்ரா,26. இவர்களுக்கு ஆறு மற்றும் நான்கு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மனைவி அலெஸ்சான்ட்ரா அழகாக இருந்ததால் அவர் மீது ஜியான்கார்லோவுக்கு சந்தேகப்புத்தி எழுந்தது. இதனால் அவரை தனியாக விட்டுச் செல்ல முடியாமல் தவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பால்மா பகுதியில் உள்ள தனது வீட்டில் அலெஸ்சான்ட்ராவை, இரண்டு கத்தரிகோலால் மார்பில் குத்தி கொலை செய்தார். அந்த நேரத்தில் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த கொலை சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார், ஜியான்கார்லோவை கைது செய்தனர்."மனைவி ரொம்ப அழகாக இருந்ததால்தான் கொலை செய்தேன்' என, கார்லோ தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.