கல்முனை, அக்கரைப்பற்று, காத்தான்குடியிலும் சிலை வரலாம் - மௌலவி முபாரக் ஆருடம்
கல்முனை கரையோர நிர்வாக மாவட்டம் கேட்ட முஸ்லிம்கள் இன்று பிச்சை வேணாம் நாயைப்பிடி என்ற நிலைக்கு மோசமாக பின் தள்ளப்பட்டமைக்கு காரணம் முஸ்லிம் காங்கிரஸ்களின் சுயநலமும் திரும்பத்திரும்ப இவர்களுக்கே வாக்குப்போடும் மக்களுமாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அனுப்பி சார்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
தம்புள்ள சம்பவத்தை தொடர்ந்து நாம் அரசின் மெத்தன போக்கை கண்டித்தோம். இதனால் இரகசிய பொலிஸ், விசாரணை என பல விடயங்களுக்கு முகம் கொடுத்தோம். ஆனால் மு. கா தலைவர் காத்தான்குடியில் வீறாப்பாய் பேசி விட்டு கொழும்பு வந்ததும் தனது பேச்சைப்பற்றி, அலட்டிக்கொள்ள வேண்டாம் என அரசுக்கு கூறி தப்பித்துக்கொண்டார். அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் வாக்குள்ள ஒரு கட்சி இது விடயங்களில் எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்று கூட தெரியாதவர்களாக இவர்கள் இருக்கின்றனர். மக்கள் வாக்கில்லாத கட்சிகள் மற்றும் எதிர் கட்சிகள்தான் பேச்சோடு நிறுத்திக்கொள்ளும். ஆனால் மு. காவோ, ஏனைய முஸ்லிம் கட்சித்தலைமைகளோ எந்தவித அரசியல் நடவடிக்கையும் எடுக்காததனாலேயே பிரச்சினை தெஹிவளை வரை சென்று மூதூர், கரிமலையூற்று என தொடர்ந்துள்ளது. மிக விரவில் கல்முனை, காத்தான்குடி, அக்கரைப்பற்று நகர மத்தியிலும் சிலை வரலாம்.
இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்ததும் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பேசுவோம் என இப்போது மு. காவினர் கூறுவது அப்பட்டமான ஏமாற்று வேலையாகும். ஸ்ரீ. மு.கா இந்த அரசாங்கத்தில் கடந்த இரண்டு வருடமாக இணைந்து செயற்படுகிறது. அப்படியாயின் இதுகால வரை இவர்கள் எந்த உரிமை பற்றியும் அரசுடன் பேசவில்லை என்பது தெளிவாகிறது.
கிழக்கு தேர்தல் முடிவுற்று முஸ்லிம்கள் அனைத்தையும் இழந்தாலும் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை இவர்கள் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பேசவே மாட்டார்கள் என்பது எமக்குத் தெரியும். கடந்த 12 வருடங்களாக ரஊப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம்களின் பாரிய வாக்குப்பலம் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் இந்த 12 வருட காலத்துள் முஸ்லிம் மக்களின் எந்த உரிமையை பெற்றுத்தந்துள்ளது என்பதை பகிரங்கமாக கூற முடியுமா என கேட்கிறோம். இதே போன்றுதான் ஏனைய காங்கிரஸ் கட்சிகளும் உள்ளன. குட்டக்குட்ட குணிபவன் முட்டாள் என்பார்கள். எத்தனை தடைவைதான் எமது மக்கள் இவர்களால் குட்டுப்பட்டுவிட்டார்கள்.
ஒரு காலத்தில் முஸ்லிம் மாகாணம் என ஏமாற்றினார்கள். பின்னர், கரையோர மாவட்டம் என்றனர். பின்னர் ஆட்சியை மாற்றப்போகிறோம் என்றனர். பின்னர் முஸ்லிம் முதலமைச்சர், பிரதேசத்துக்கு மேயர் என்றனர். இப்போது தேர்தலுக்குப்பின் உரிமை பேசுவோம் என்கின்றனர். கடைசியல் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலையில் இன்று முஸ்லிம் சமூகம் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றில் ரவுண்டு அபௌட் டிலே உள்ள மணிக்கூட்டு கோபுரம் உண்டு..இதில் பல வருடங்களாக ஒரு அரச மரம் வளர்ந்து வருகுது.. இப்ப பெருத்துவிட்டது..... அதில் காவி கோடி ஒன்றை நாட்டியுள்ளனர்.....இதை பற்றி நாம் சொன்னால் யாரும் கண்டு கொள்வதில்லை.....அநேகமாக் முதல் புத்தர் சிலை அமைச்சர் அதவுல்லாவின் தலைமையில் நிறுவப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை........பொறுத்திருந்து பாருங்கள்........
ReplyDeletePlease ask moulavi to send you a nice picture becose this picture look like kenayan appavi maathiri irukku please change this
ReplyDelete