யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
பா.சிகான்
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்தி செய்யுமாறு கோரியும் முஸ்லிம்களை அவர்களது செந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியும் கடந்த வெள்ளிக்கிழமை புதிய முகையதீன் ஜும்மா பள்ளிவாசலின் முன் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழ்ப்பாண பிரதேச செயலரை உனடியாக இடமாற்றுமாறு கோரியும் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் முஸ்லிம் மக்களின் வாழ்வியல் உரிமையை அங்கிகரிக்குமாறும் அவர்களை உடனடியாக செந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என ஆர்பாட்க்கரார் கோரினர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளையில் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டடிருந்தது. ஜும்மா தொழுகையை அடுத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.
குறிப்பு : புகைப் படத்தை பார்க்கும் பொழுது, குறித்த மினாரா மானிப்பாய் வீதி முஹையத்தீன் பள்ளிவாசளுடையதாக தெரிகின்றது.இது பெரிய பள்ளிவாசலாக இருக்க முடியாது.
ReplyDeleteயாழ் பிரதேச செயலாளராக இருப்பவர் யார்? அவரால் மீளக் குடியேறச் செல்லும் யாழ் முஸ்லிம்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகள் / பாரபட்சங்கள் என்ன?
ReplyDeleteமன்னார் முஸ்லிம்கள் விடயத்தில் பாராட்டத் தக்க விதத்தில் சிறப்பாகச் செயல் பட்டு, ஆயர் மற்றும் அநீதிபதியின் திருகுதாளங்களை வெளிக்கொணர்ந்த யாழ் முஸ்லிம் இணையத்தளம் ஏன் இது குறித்து இதுவரை எந்தச் செய்தியும் வெளியிடவில்லை?
தயவு செய்து விபரங்களை வெளியிடவும்.