தனித்துப்போட்டியிட காரணம் என்ன..? ரவூப் ஹக்கீம் விளக்குகிறார்
அமைச்சர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது ஏற்பட்ட முரண்பாடுகளே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட முடிவு எடுத்தமைக்கு காரணம் என்று அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பி.பி.சி. டம் தெரிவித்தார்.
எத்தனை இடங்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒதுக்குவது என்ற பிரச்சனையைக் காட்டிலும் , அதிகாரப்பகிர்வு போன்ற பிரச்சினைகளிலும் கருத்து வேறுபாடுகள் நிலவியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
அதிகாரப்பகிர்வு பிரச்சனைகள் என்றால், முதலமைச்சர் பதவி முஸ்லிம்களுக்கு என்ற கோரிக்கையில் ஆளுங்கட்சித் தரப்பு விட்டுக்கொடுக்கவில்லையா என்று கேட்டதற்கு , இதுகுறித்து மேலோட்டமாக விவாதிக்கப்பட்டதாகவும், ஆனால் இந்தப் பிரச்சினை குறித்து ஆளுங்கட்சியின் நிலைப்பாட்டில் தங்களுக்கு சந்தேகங்கள் நிலவின என்றும் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஆனாலும் , இந்தப் பிரச்சனை குறித்து வெளிப்படையான பிணக்குகளை உருவாக்குவதை தாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.
ஆனால் தேர்தலுக்குப் பின்னர் தங்களது கட்சி “சில நிபந்தனைகளோடு” அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறது என்றார் ரவூப்.
'இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற “ இணக்க அரசியல்” என்ற கொள்கையின் அடிப்படையிலானது. தேர்தலில் எங்களது தனித்துவத்தை நிலைநாட்டி, அதன் மூலம் கிடைக்கின்ற பலத்தை வைத்து, தேர்தலுக்குப் பின்னர், அரசுடன் இணைந்து செயல்படுவது என்பதுதான் இந்த இணக்க அரசியல்' என்றார் ஹக்கீம்.
இலங்கையின் கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணம் என்ற வகையில், இன, மதச் சிறுபான்மையினர் ஒன்றாக இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கையை முஸ்லீம் காங்கிரஸ் பரிசீலிக்கவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம், தமிழ்பேசும் மக்கள் குறித்த அபிலாஷைகள் பல இருக்கின்றன, அவற்றிற்குக் குறுக்கே நிற்க முஸ்லிம் காங்கிரஸ் விரும்பவில்லை, ஆனால் தனித்துப் போட்டியிடுவதன் மூலம், சிநேகபூர்வ சக்திகளுடன் நாங்கள் பகை உணர்வுடன் அரசியல் செய்யப் புறப்பட்டிருக்கிறோம் என்று யாரும் பொருள் கொள்ளக்கூடாது என்று கூறினார்
கிழக்கு மாகண முஸ்லிம் மக்கள் மிக மிக அப்பாவிகள் பொதுவாக முஸ்லிம் தலைவர்கள் எம்மை பற்றி சிந்திக்கின்ரார்கள் என்று நம்புகின்றனர் ஆனால் அவர்கள் அவர்களை பற்றித்தான் சிந்தி்க்கின்றார்கள் தேர்தலில் இட்ட பணத்தை மீண்டும் எடுப்பது எப்படி மக்களை எப்படி வசப்படுத்துவது,ஏமாற்றுவது என்பதைத்தான் சிந்திக்கின்றனர் மிகவும் மோசமான முனாபிக் தனமாக நடந்து கொள்கின்றனர். முஸ்லிம் தலைவர்களை அல்லாஹ் வினாவுவான் உனக்கு சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை தந்தேன் நீ என்ன செய்தாய் என்று இவர்கள் செய்ததை பற்றி கூற முடியாததால் மரணித்த மனிதனை காட்டியும், அம்மனிதனின் பாடல்களையும் போட்டு வாக்கு பிச்சை கேட்பார்கள் முடியுமானால் தாங்கள் செய்ததை காட்டியும் செல்லியும் இம்முறையும் வாக்கு கேளுங்கள் பார்ப்பேம். இதனை இம்முறையும் கிழக்கு மாகண முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை'
ReplyDelete