Header Ads



மன்னிப்பு கேட்டது அமெரிக்கா - மீண்டும் அடிமைப்பட்டது பாகிஸ்தான்..!

கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்காவின் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் அமெரிக்காவிடையேயான  உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படையினருக்கு இராணுவ தளவாடங்கள் மற்றும் அத்தியாவாசியப் பொருட்களை எடுத்து செல்ல வடக்கு பாகிஸ்தானின் சாலைகளை பயன்படுத்த அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்து வந்தது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் செய்தியாளர்களிடம் கூறும்போது,

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேட்டோ படையினரால் பாகிஸ்தான் இராணுவத்தினர் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தினால் நடந்த தவறுகளை இரு தரப்பினரும் புரிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இணைப்பு சாலைகளை நேட்டோ படையினர் பயன்படுத்திக்கொள்ள திறந்து விடப்பட்டிருப்பதாகவும் அதற்கு எந்தவித வரியும் செலுத்த தேவை இல்லை என்று அறிவித்துள்ளதாகவும் ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

No comments

Powered by Blogger.