Header Ads



மன்னாரில் பதற்றம் - குழுக்களிடையே மோதல் - பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்

மன்னாரில் இன்று புதன்கிழமை காலை முதல் பதற்றம் நிலவுகிறது. மன்னார் உப்புக்குளம் பிரதேச மீனவர்கள், கோந்துப்பிட்டி வாடி மீனவர்களை அங்கிருந்து வெளியேற்றி தம்மை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோரி வீதி மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் பிரதான பாலத்தை மறித்த மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தால் பிரதேசத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதே வேளை பாதுகாப்புக் கடமையில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள்  தாம் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திவந்த உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதியை தமடம் ஒப்படைக்குமாறு கோரியே இந்த பேரணியைஆரம்பித்துள்ளனர்.

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதி முஸ்லிம்களுக்கு சொந்தமான பிரதேசமாகும் புலிகளினால் 1990ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்தகரிப்பு செய்யப்பட்டபோது இந்த கிராம முஸ்லிம்களும் புலிகளினால்பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.அதன் பின்னர் இந்த பகுதி வேறு பிரதேசத்தவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதி பிரதேச செயலாளரின் மூலமாக ஒப்பந்த அடிபடையில் விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .

No comments

Powered by Blogger.