'கடவுச்சீட்டு' புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறது..!
காணாமற் போன அல்லது களவாடப்பட்ட கடவுச் சீட்டுகள் பற்றி முறைப்பாட்டை தெரிவிக்கும் புதிய நடைமுறையொன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நாளை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்துகிறது.
இவ்வாறான கடவுச் சீட்டொன்றை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கையை இன்டர்போல் ஊடாக நாளை முதல் சர்வதேச மட்டத்தில் அமுல்படுத்தப் படவுள்ளதாக திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
சர்வதேச புலம் பெயர் அமைப்பின் உதவியுடன் கனேடிய அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் இத்திட்டம் நாளை ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு வரையிலும் 9,249சகல நாடுகளுக்குமான கடவுச் சீட்டுகளும், 17,236 மத்திய கிழக்கு நாடுகளுக்குமான கடவுச் சீட்டுகளும் காணாமற் போயுள்ளன என பதிவா கியுள்ளன.
1975 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் 9 மில்லியன் கடவுச் சீட்டுகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 4.4 மில்லியன் கடவுச்சீட்டுகள் இன்று செல்லுபடியானவையாக உள்ளன.
கடவுச் சீட்டொன்று காணாமற் போனவுடன் அல்லது களவாடப்பட்டி ருந்தால் உடனடியாக திணைக்களத்தின் (ஹொட்லைனுக்கு) 011-5329501 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தர வேண்டும். அல்லது இயன்றளவு துரிதகதியில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
பொலிஸ் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், இன்டர்போல் இவை மூன்றினூடாக தரவுகள் பதி யப்பட்டு சகல நாடுகளுக்கும் தகவல்கள் அனுப்பப்படும்.
காணாமற்போன அல்லது களவாடப் பட்டதாக முறைப்பாடு கிடைத்தவுடன் குறித்த கடவுச்சீட்டு திணைக்களத்தினால் ரத்துச் செய்யப்படும். உரியவர் புதிய கடவுச்சீட்டொன்றையே பெற வேண்டும்.
களவாடப்படட அல்லது காணாமற் போன கடவுச்சீட்டை மற்றவர் உபயோ கித்து வெளிநாடு செல்ல முற்பட்டாலோ அல்லது வெளிநாட்டில் எங்காவது விமான நிலையத்தினூடாக செல்ல எத்தனித்தாலோ குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின், இன்டர் போலின் தரவுகளுக்கு உடனடியாக தகவல் கிடைத்துவிடும். குறித்த கடவு ச்சீட்டை உபயோகிப்பவர் இந்தவிமான நிலையத்தில் இப்போது இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துவிடும். என்றும் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
எனவே உங்களுக்குரிய கடவுச்சீட்டை நீங்கள் மிகமிக கவனமாக மிக பாது காப்பாக வைத்திருக்க வேண்டும் என் றும் குடிவரவு - குடியகல்வு திணைக் களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
Post a Comment