Header Ads



எங்களிடம் ரசாயன உயிரியல் ஆயுதங்கள் உள்ளன - கொடூர ஷிஆ அரசாங்கம் ஒப்புதல்

தங்களிடம், ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்கள் உள்ளதாக, சிரியா அரசு ஒப்புக்கொண்டுள்ளது. சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் போராடி வருகின்றனர்.போராட்டக்காரர்களை ஒடுக்க, ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், இதுவரை, 19,106 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. டமாஸ்கஸ் நகரின் முக்கிய பகுதிகளில், டாங்குகளும், ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கிளர்ச்சியாளர்கள் மீது, ஹெலிகாப்டர் மூலம், ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. நிலைமை மோசமாகி வருவதால், சிரியாவுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் ரஷ்யாவுடனும், சீனாவுடனும், ஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னன், பேச்சு வார்த்தை நடத்தினார்.

போராட்டக்காரர்களை கொன்று குவிக்கும் சிரியா அரசு மீது, பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு சபையில், கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தை, ரஷ்யாவும், சீனாவும் ஏற்கவில்லை. இதற்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவின் எல்லைப் பகுதிகளை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் கைப்பற்ற, முயற்சித்து வருகின்றனர். கடந்த வாரம், 21 எல்லைப் பாதுகாப்பு வீரர்களை, கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றனர். ராணுவத்துக்கு எதிராக, "எரிமலை' என்ற பெயரில் போராட்டத்தை நடத்தி வருவதாகவும், தங்கள் மீது, ரசாயன ஆயுதங்களை உபயோகிக்க, அரசு படைகள் முயற்சிப்பதாகவும், கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் உள்ள பகுதிகளை நோக்கி, ரசாயன ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக சந்தேகித்த அமெரிக்கா, "போராட்டக்காரர்கள் மீது, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது' என, எச்சரித்தது. இது குறித்து, சிரியா நாட்டின் வெளியுறவு அதிகாரி ஜிகாத் மக்டிசி குறிப்பிடுகையில், "வெளிநாட்டு தாக்குதலை முறியடிக்கவே, ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை வைத்திருக்கிறோம். இவற்றை, போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்தும் எண்ணம் இல்லை' என்றார்.

1 comment:

  1. ஈரான், ஹிஸ்புல்லாஹ் என்பன நேரடியாகவே களத்தில் உள்ளன.
    போராளிகளை கொன்று குவிப்பதில் ஹிஸ்புல்லாக்களின்
    நேரடிப் பங்கு பலமுறை உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.