Header Ads



அட பாவிகளா..!

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியின் சத்துணவு மையத்தில் சத்துணவு தயாரிப்பாளர்களாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த திங்கட்கிழமை (ஜூலை2, 2012) நியமிக்கப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் சமைத்த உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் என்று கூறி, அந்த கிராமத்தில் இருந்த கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்களின் பிள்ளைகளை அந்த பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

இந்த பிரச்சனை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றபோது, அந்த கிராம மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அந்த இரு பெண்களையும் அந்த பள்ளியிலிருந்து வேறொரு பள்ளிக்கு மாற்றல் செய்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயன்றதாக கூறுகிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலர் சாமுவேல்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயல் தீண்டாமை ஒழிப்புச்சட்டத்தின் கீழ் குற்றச்செயல் என்று கூறி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தங்கள் அமைப்பு வாதாடியதைத் தொடர்ந்து, அவர்களின் மாற்றல் உத்தரவுகள் திரும்பப்பெறப்பட்டு அந்த இருவரின் ஒரு பெண் மீண்டும் அங்கே சென்று சமைக்கத் துவங்கியிருப்பதாகவும், ஆனாலும் கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை அங்கே சாப்பிட இன்னமும் அனுமதிக்கவில்லை என்றும்  தெரிவித்தார் சாமுவேல்.

மாநில அரசு தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றால், அந்த கிராம மக்கள் தங்களின் தவறான போக்கை மாற்றிக்கொள்வார்கள் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார். bbc


 

No comments

Powered by Blogger.