இலங்கையில் இணையதளங்களுக்கு புதிய விதிகள்
புதிதாக செய்தி இணையத் தளம் ஒன்று பதிவு செய்யப்படும் போது, ரூபா 1 இலட்சம் அறவிடப்படுவதோடு, வருடா வருடம் அதனைப் புதுப்பிப்பதற்காக, 50 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பத்திரிகை கவுன்ஸிலின் 1973ஆம் ஆண்டு 5ஆம் இலக்கச் சட்டத்தில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை அனுமதியும் கோரப்பட்டுள்ளதாக கெஹலிய மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்போது செயற்படும் செய்திச்சேவை இணையத்தளங்களும் பதிவுக்கட்டணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment