Header Ads



ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

ஊடக அடக்கு முறையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று ஊடக அமைப்புகளால் நடத்தப்பட்டன. அண்மையில் லங்கா எக்ஸ் நியூஸ், சிறிலங்கா மிரர் ஆகிய இணையத்தள ஊடகங்கள் மூடப்பட்டதுக்கு மற்றும் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் தாக்கப்படுவதையும் அச்சுறுத்தப்படுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்  ஒன்றியம், முஸ்லீம் மீடியா போரம் ,உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடாக வியலாளர் சம்மேளனம்  ஆகியன கலந்து கொண்டதுடன் சில அரசியல் கட்சிகளும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடக அடக்கு முறையை ஒழிப்போம், ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவது, அச்சுறுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்  என்ற பாதாகைகள் ஏந்தியிருந்ததுடன் ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தாதே, கோத்தா, பெட்ரிகாவிடம் மன்னிப்பு கேள் என்ற கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்ணணி தலைவர் மனோ கணேசன், அக்கட்சி உறுப்பினர்கள் வேலணை வேணியன், பாஸ்கரா, நவசமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ன , ஐ.தே.க.பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஐ.தே.க.கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் உட்பட பல அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாக கொழும்பு விகாரமகா தேவி பூங்கா அருகில் உள்ள சுற்று  வட்டம் வரை பேரணியாக சென்று  ஜெயவர்த்தன  நிலையத்தை அடைந்து முடிவடைந்தது.



No comments

Powered by Blogger.