Header Ads



பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சி வரலாம் - முஷாரப்

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் பதவி விலகிய பிறகு வெளிநாடு சென்றார். பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. இங்கிலாந்து மற்றும் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் முஷரப் அமெரிக்காவில் கொலோராடோ பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் குறித்து முஷரப் கூறியதாவது,

பாகிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலை சரியில்லை. வீழ்ச்சியில் இருந்து நாட்டையும், அரசியல் அமைப்பு சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டாமா? இந்த சூழ்நிலையில் நாட்டை பாதுகாக்க மீண்டும் ராணுவம் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே அங்கு ராணுவ ஆட்சி மீண்டும் வரலாம். அதை மறுப்பதற்கில்லை.
என்று அவர் கூறினார்.

1 comment:

  1. He already destroyed pakistan economics and country now try to get more supports back power!

    ReplyDelete

Powered by Blogger.