தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சூத்திரதாரி இனாமலுவே சுமங்கள தேரரின் கவலை..!
மொஹொமட் ஆஸிக்
தம்புள்ளை புனித பூமியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வண இனாமலுவே சுமங்கள தேரர் தெரிவித்தார். இன்று தம்புள்ள விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த காலம் ஏற்பட்ட பரபரப்பான நிகழ்வுகளுக்கு பிறகு அரச நிறுவனங்களுடன் இரண்டு முறை கலந்துரையாடிய போதும் இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றைக் கூட சமர்பிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு வெளிநாட்டு பௌத்த மக்கள் அடிக்கடி தம்முடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கேட்பதாகவும் அவர்களுக்கு உண்மையை கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலம் தெரிவித்தார்.
We should send him sometime BURIYANI saapadu then he will quiet silence completly!
ReplyDelete