Header Ads



சவூதி அரேபியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை

சவூதியில் புகையிலைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பொது இடங்களில் இனி சிகரெட் பிடிக்கவும் தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில், 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு புகையினை பொருட்களை விற்க கூடாது, அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிகரெட் பிடிக்க கூடாது என சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகிலேயே ‌புகையிலை பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் சவூதி நான்காவது இடத்தில் உள்ளது.  நாள் ஒன்றுக்கு 8 மில்லியன் டாலர் புகையிலைக்கு சவூதி செலவிடுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்நிலையில் சவூதி இளவரசர் அகமது பின் அப்துலஜீஸ் கூறுகையில்,

சவூதி மக்களின் சுகாதார நலன் காக்க, புகையிலை பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‌கடந்த ஆண்டு தான் முதன்முறையாக விமான நிலையங்களில் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இது குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

2 comments:

  1. எடுத்ததற்கு எல்லாம் பத்வா வழங்கும் சவுதியின் முப்திகளுக்கு சிகரட் ஹராம் என்பது தெரியாதா, அல்லது நாட்டு அரசு, பத்வாவை நடைமுறைப் படுத்துவதில்லையா?

    நம் நாட்டிலும் பொது இடங்களில் புகை பிடித்தல் தடைச் சட்டம் அமுலில் உள்ளது, ஆனால் துரதிஷ்டவசமாக அது கடைப்பிடிக்கப் படுவதில்லை. விளையாட்டு மைதானங்களில் கூட புகை பிடிக்கின்றார்கள். சிறுவர்கள், பெண்கள் கூட பாதிக்கப் படுகின்றார்கள்.

    ReplyDelete
  2. எங்கள் பௌத்த நாட்டிலேயே இந்த சட்டம் அமுலில் இருக்கிறது.
    ஒரு முஸ்லிம் நாடு என்ற வகையில் "சவுதியில் புகைபிடிப்பது தடை"
    என்ற செய்தி வந்திருக்க வேண்டும். ஹராமான செயலொன்றை மறைவான
    இடத்தில் செய்வதுக்கு சவுதி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்றுதானே
    இதன் அர்த்தம்....

    ReplyDelete

Powered by Blogger.