Header Ads



லிபியாவில் தேர்தல் - சாதித்துக்காட்டிய இஹ்வான்கள்

லிபியாவில் 60 ஆண்டுகளுக்குபின் இடம்பெற்ற முதலாவது ஜனநாயக தேர் தலில் தாம் முன்னிலை பெற்றிருப்பதாக மிதவாத கூட்டணியான தேசிய கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது. ‘ஆரம்ப கட்ட முடிவுகளின் படி கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களை வென்றிருக்கிறது’ என்று தேசிய கட்சிகளின் கூட்டணி பொதுச் செயலாளர் பைசல் கிரக்ஷி ஏ. எப். பி.  செய்திச் சேவைக்கு குறப்பிட்டுள்ளார்.

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் போது கிளர்ச்சியாளர்களின் இடைக்கால அரசின் தலைவராக இருந்த மஹ்மூத் ஜிப்ரில் இந்த தேசிய கட்சிகளின் கூட்டணிக்கு தலைவராக செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் நாட்டின் பெரிய நகரங்களில் மஹ்மூத் ஜிப்ரிலின் கூட்டணி முன்னிலை பெற்றிருப்பதை ஒப்புக்கொண்டுள்ள லிபிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான நீதிக்கும் கட்டுமானத் திற்குமான கட்சி நாட்டின் தென்பகுதியில் கடும் போட்டி நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.

‘தேசிய கட்சிகளின் கூட்டணி ஒருசில பெரிய நகரங்களில் முன்னணியில் உள்ளது. மிஸ்ரட்டாவிலும் அவர்கள் முன்னணியில் உள்ளனர். தலைநகர் திரிபோலி மற்றும் பெங்காசியில் அவர் சராசரியான பெறுபேற்றை பெற்றுள்ளார். எனினும் நாட்டின் தென்பகுதியில் கடும் போட்டி நிலவுகிறது’ என்று முன்னாள் அரசியல் கைதியும் லிபிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நீதிக்கும் கட்டுமானத்துக்குமான கட்சியின் தலைவருமான மொஹமட் சவான் குறிப்பிட்டுள்ளார்.

லிபியாவில் நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று ஆரம்பமானது. இதில் ஆரம்பகட்ட முடிவுகளில் மஹ்மூத் ஜிப்ரிலின் கூட்டணி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல்கட்சி ஆகியன முன்னணியில் இருப்பதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒருசிலபகுதிகளில் வன்முறைகள் பதிவானாலும் நாடு தழுவிய ரீதியில் தேர்தல் சுமூகமாக நடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. சுமார் 60 வீத வாக்கு பதிவு இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

லிபிய மக்களவையின் 200 ஆசனங் களுக்காக இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்வாகும் பாராளுமன்றம் லிபியாவின் இடைக்கால அரசை பொறுப்பேற்கவுள்ளதோடு புதிய பிரதமர் ஒருவரையும் நியமிக்கவுள்ளது.

தேர்தலின் இறுதி முடிவுகள் இன்றைய தினம் வெளியிட லிபிய தேர்தல் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் தேர்தல் முடிவடைந்ததையொட்டி அன்றைய தினம் இரவு பெங்காசி மக்கள் பட்டாசு கொளுத்தி தேர்தல் முடிவை கொண்டாடியமை விசேட அம்சமாகும்.

லிபியாவில் முதல் முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் முடிவடைந்ததையொட்டி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் தனது வாழ்த்தை வெளியிட்டுள்ளார். ‘லிபியா மற்றுமொரு மைல்கல் எட்டுவதையிட்டும் ஜனநாயக முறை யிலான அரச மாற்ற செயற் பாட்டுக்கும் அமெரிக்க மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்தக் கொள்கிறேன்’ என பராக் ஒபாமா விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 100 க்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் பெரும்பாலான கட்சிகள் ஒரு சில வாரங்களுக்குள் அமைக்கப்பட்டிருந்தது. எனினும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நீதிக்கும் கட்டுமானத்துக்குமான கட்சியே பிரதான கட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அத்துடன் 58 கட்சிகளை இணைத்து அமைக்கப்பட்ட லிபிய இடைக்கால அரசின் முன்னாள் தலைவர் மஹ்மூத் ஜிப்ரிலின் தேசிய கட்சிகளின் கூட்டணியும் சவாலாக உள்ளது. லிபியா 1952 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னரே முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது. அதே போன்று 1965 ஆம் ஆண்டில் கடைசியாக நாடு தழுவிய ரீதியில் அங்கு தேர்தல் இடம்பெற்றது. அதில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை.

எனினும் இடம் பெற்ற தேர்தலின்போது ஒரு சில நகரங்களில் மோதல்கள் இடம்பெற்றன. குறிப்பாக ராஸ் லனூபா, அஜ்தபியா, கிழக்கு லிபியாவின் அனைத்து பகுதி களிலும் தேர்தலுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. குறிப்பாக ஆங்காங்கே துப்பாக்கிச் சண்டைகள் மூண்டன. எனினும் 98 வீதமான வாக்குச் சாவடிகள் தேர்தல் இடம்பெற்றதாக லிபிய தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதில் லிபிய பாராளுமன்றத்தின் மொத்தமுள்ள 200 ஆசனங்களில் 60 ஆச னங்கள் ஒதுக்கப்பட்ட கிழக்கு லிபியாவில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டன. எண்ணெய் வளமுள்ள கிழக்கிற்கு குறைவான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2.8 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்ற லிபிய தேர்தலில் 200 ஆசனங்களுக்கும் சுமார் 4000 பேரளவில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.