Header Ads



கிழக்கு தேர்தலில் அரசுடன் இணையாதீர்கள் - மு.கா. க்கு ஆலோசனையாம்

உதயன்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு முஸ்லிம் தலைவர்களும், கல்விமான்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து அதன் தலைமைப் பீடம் இதுவரை எந்தவித முடிவையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கில் முஸ்லிம்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் அரசு பெரிதாக மேற்கொள்ளவில்லை. இதனால் அரசுக்குத் தொடர்ந்தும் முண்டு கொடுத்துக் கொண்டிருந்து பயன் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பீடத்திடம் முஸ்லிம் மதத் தலைவர்களும், கல்விமான்களும் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

No comments

Powered by Blogger.