தேர்தலில் போட்டியிட அதாவுல்லாவின் மகனுக்கும், ஹிஸ்புல்லாவின் சகோதரிக்கும் ஆசை
PP
கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கு நடக்கவுள்ள தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட, அரசின் அமைச்சர்களின் உறவினர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
அமைச்சர் அதாவுட செனிவிரத்னவின் மகன், அமைச்சர் சந்திரசேனவின் சகோதரர், அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீரவின் மகன், அமைச்சர் ஜெகத் பாலசூரியவின் மகன், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரின் மகன், பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் சகோதரி, அமைச்சர் அதாவுல்லாவின் மகன், அமைச்சர் ஜோன் செனிவிரத்னவின் மருமகன், பிரதி அமைச்சர் கருணாவின் சகோதரி உள்ளிட்ட பலர் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஆளும் கை்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட விண்ணப்பித்த 467 பேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆளும்கட்சியின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
எனினும் நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமைச்சர்களின் உறவினர்கள் தொடர்பான இறுதிமுடிவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுவே மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
அமைசர்களின் உறவினர்கள் அமைசர்களின் வளங்களையும் செல்வாக்கையும் பயன் படுத்தும் வகையில் அமைசர்களாலேயே சிபார்சு செய்யபடும் இடத்தே அமைசர்களின் உறவினர்கள் போட்டி இடுவதை பற்றி கட்சிகள் சிந்திக்க வேண்டுமே அன்றி தானாக அரசியலில் புகுந்து மக்கள் செல்வாக்கை பெற்றோரை இதை காரணமாக வைத்து அரசியலை விட்டு ஒதுக்க கூடாது
ReplyDeleteபிரதி அமைசர் ஹிஸ்புல்லாஹ்வின் சகோதரி ஹிஸ்புல்லாஹ்வால் அரசியலுக்கு அறிமுகபடுத்தபடவும் இல்லை வளர்க படவும் இல்லை மேலும் அவர் முஸ்லிம்காங்கிரஸ் மகளிர் பிரிவு தலைவியாக நகரசபை பிரதி நிதியாக இருக்கிறார் ஹிஸ்புல்லாஹ் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் ஒரு வரும் சகோதரர்களாக இருப்பினும் அரசியலில் எதிர் எதிர் முகாந்திரங்களிலேயே இன்று வரை இருக்கின்றனர்
Why cannot Mahinda and brothers,Bandarnayaake & family,JR and Ranil,Premadasa & son ...... Many more Sinhalese why Muslim generation cannot participate in democratic election...
ReplyDeletePlease Meran give your voice you brother disappeared why? no comments at all
எத்தனையோ அமைச்சர்களின் உறவினர்கள் கழத்தில் இறங்கும் போது, ஏன் அமைச்சர் அதாஉல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் என்று மட்டும் தலைப்பு.... இப்படியான குரோத எண்ணம் கொண்ட எண்ணங்கழால்தான், நமது முஸ்லிம் சமூகத்தில் இவ்வளவு பிளவு.... எந்த குரங்கன் கேட்டால் என்ன..... அதன் கொள்கை கோட்பாடு சரியா எபதுதான் இந்த சமூகத்தால் உணரப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட விழம்பரங்கழ் வேண்டாம்.... SLMC தலைவரின் மனைவியே சென்ற மஹாண சபையிலே திருகோண மலை வீதிகலில் இறங்கி கணவருக்கு வாக்குச்சேர்த்த பெருமை உண்டென்றால் மகன், சஹோதரி கேட்பதிலே என்ன தப்பு.....
ReplyDeleteஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பின் நிமிர்த்தம் வீதிகளில் இறங்கி ஒட்டு கேட்பது என்பது வேறு தனது தந்தையோ உறவினரோ அமைச்சர்களாக இருந்து கொண்டு சுக போகங்களை அனுபவித்து வருகிறார் என்கிற நப்பாசையால் தானும் அரசியலில் ஈடுபட்டு அதே போன்று அனுபவிக்க வேண்டும் என நினைப்பது வேறு.
ReplyDeleteவாழையடி வாளையாகதான் அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமா என்ன? அவர்களது பரம்பரை மட்டும்தான் அரசியலில் ஈடுபட வேண்டுமா? அவர்களை ஓட்டுபோட்டு சுகபோகமாக வாழவைத்து கொண்டிருக்கும் மக்களுள் ஒருத்தரையேனும் அவர்களது இடத்திற்கு நியமிக்கலாம் அல்லவா?