புத்தர் சிலை வைக்கப்பட்ட பள்ளிவாசலை பார்க்க முஸ்லிம் எம்.பி. களுக்கு அனுமதியில்லை
இர்ஷாத் றஹ்மத்துல்லா
திருமலை மாவட்டத்தின் பட்டினமும்,சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கருமலை ஊற்று கிராமத்தில் முஸ்லிம்கள் தமது சொந்த இடத்திற்கு செல்வதற்கு தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும்,முற்கம்பி பாதுகாப்பு வேலியின் பின்னால் பௌத்த மதத்தின் சிலைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அங்குள்ள மக்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும்,இது குறித்து தமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஊடாக ஜனாதிபதியினதும்,பிரதமரினதும் கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளதாக அம்மக்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்.தெரிவித்துள்ளார்.
அண்மையில் அங்கு தமது குழுவினர் சென்று நிலைமையினை பார்வையிட்ட போதும்,அங்குள்ள பள்ளிவாசலை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஏற்கனவே அப்பிரதேசத்துக்கு பொறுப்பான இரானுவ அதிகாரியிடம் எடுத்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்.இந்த நாட்டு முஸ்லிம்கள் மிகவும் கௌரவமானவர்களாக வாதழ்வதை இதனுடன் தொடர்பு பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம்களின் பாரம்பாரிய பூமிகள் கபளீகரம் செய்யப்படுவதை ஒரு போதும் ,அனுமதிக்கமுடியாது என்றும்,அம்மக்களிடம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,1834 அம் இந்திய முஸ்லிம் ஒருவரால் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்ட தொழுகை இடம் பெற்றதையும் அம்மக்கள் ஆவனங்கள் மூலம் தம்மிடம் எடுத்துக்காட்டியதாகவும் அவர் கூறினார்.
கருமலையூற்றுப் பள்ளிவாசல் அமைந்துள்ள மலைப்பகுதி. |
Post a Comment