Header Ads



அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸை ஏமாற்றியதா..? வேட்பாளர் ஒதுக்கீட்டில் வேட்டு..!!

TM

(றிப்தி அலி)

முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் 12 ஆசனங்கள் தருவதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில் தற்போது 11 ஆசனங்கள் மாத்திரமே வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள முஸ்லிம் கட்சிகளுக்கான வேட்பாளர் ஒதுக்கீடு திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளுக்கே வேட்பாளர் பங்கீடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் அதாவுல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 11 வேட்பாளர்களும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் இணைந்து 8 வேட்பாளர்களும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியில் போடடியிட முடியும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் 5 வேட்பாளர்களும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் தலா 3 வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியில் போட்டியிட முடியும்.

இதேவேளை, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் இணைந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா 3 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 2 வேட்பாளர்களையும்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் நிறுத்த முடியும்.

இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு முஸ்லிம் வேட்பாளர் வீதம் நிறுத்தப்படுவர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் போட்டியிடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளர் என தெரிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும்  அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

4 comments:

  1. முஸ்லிம் காங்கிரஸின் நிலைமை 4 , 3 , 2 என்றாலும் ஒகே தான் போல் தெரிகிறது ..... என்ன கொடுமை Rauff Hakkeem அவர்களே.

    ReplyDelete
  2. இதுக்குதான் சொல்லுறது எலிவளையானாலும் தனிவலை வேண்டும் என்று புரியுதா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர் பீட உறுப்பினர்களே!
    மற்றவர் பல்லைவிட நமது முரசு மேல் அல்லவா சகோதரர்களே?நாம் தோற்றாலும் வென்றாலும் எமது தனித்துவம் காக்கப்படும் அல்லவா? எமது சமூகம் எம்மை புறக்கணித்தால் மட்டுமே நாம் தோல்வி அடைந்ததாக அர்த்தம், இது புரியாமல் போனது ஏன் தலைவர்களே(??????)
    ஆனானப்பட்ட UNP ஐ எப்படி தோற்கடிப்பது என்று இன்றைய அரசுக்கு கற்றுக்கொடுத்த கட்சி அல்லவா நாம்? இன்று ஏன் செல்லாக்காசானோம்?

    ReplyDelete
  3. why cant hakeem and co can not understand the underground work of mahinda and bro? wht a shame. i think muslims in the eastern province once again going to be put down by crazy decission bt muslim congress and their current leaders.wht is secret regarding chief minsiter post? congress doesnt tell anything about chief minister, wht basil saying is 'we didnt talk anything about CM post with muslim congress and there is no agreement will be sighned between both parties. mr hakeek , please dont take a such bold decisiion to keep ur ministry portfolio.we contest alone and give the lessoon to govenrment to loose it ? sure goverment will be loosing edge if there is no sopprt from congress

    ReplyDelete

Powered by Blogger.