முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய அரசாங்கத்தின் நம்பிக்கை காப்பாற்றப்படுமா..? வீண்போகுமா..??
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாண சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தம்முடன் இணைந்து போட்டியிடும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் அனுர பிரயதர்சன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு இருக்கிறது. இதில் சிக்கல் ஒன்றும் இல்லை. எனவே முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும். நிச்சமாக இந்த தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையிடல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட ஏதேனும் நிபந்தனைகள் விதித்துள்ளதாக என அவரிடம் வினவ, இதற்கு பதில் வழங்கிய அவர், இது தொடர்பில் தம்மால் கருத்து கூற முடியாது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் கட்சியின் தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் இறுதி தீர்மானங்கள் பேச்சுவார்த்தை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment