Header Ads



கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் சங்கமிக்கிறது முஸ்லிம் காங்கிரஸ்..?



கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடுன் இணைந்து போட்டியிடும் வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுவதாக நவமணி பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவது ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு முக்கிய பதவிகளை வழங்கவும் இணக்கம் கண்டுள்ளதாகவும், அறியவருகிறது.

மேலும் தான் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடாத்திய பேச்சுக்கள் நம்பிக்கையூட்டுவதாக அமைந்தமையால் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது  சிறந்ததென முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது கட்சிப் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதெனவும் நவமணி பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.