மருத்துவர்கள் கைவிட்ட குழந்தை உயிர்தப்பிய அதிசயம் (படங்கள் இணைப்பு)
TL
எரிகாயங்களால் தனது உடம்பில் 80 வீதமான பகுதிகள் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை அதிசயத் தக்க வகையில் வளர்ப்பு தோல் நடுகை சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளது. தென்ஆபிரிக்காவின் ஜொஹானஸ் பேர்க் நகரில் ஒரு குடும்ப barbegueஇல் நடந்த கொடூரமான ஒரு விபத்தில் சிக்கிய இஸபெல்லா பிப்பி குர்கர் என்ற சிறுமி உயிர் தப்புவார் என வைத்தியர்கள் எதிர்பார்க்க வில்லை என டெய்லி மெயில் குறிப்பிட்டுள்ளது.
அச்சிறுமியின் முதுகு, முகம், மார்பு, கைகள், கால்கள் என்பவற்றில் நடுவதற்காக 41 நடுகைத் தோல் துண்டுகள் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம்கொண்டு வரப்பட்டு அவளுடைய உறுப்புகளில் நடுகின்ற சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாள்.
கடந்த புத்தாண்டிற்கு முன் ஜொஹார்னஸ்பேர்கில் ஒரு barbegueஇல் தீப்பிடிக்கக் கூடிய திரவத்தை கொண்ட கொள்கலன் ஒன்று இச்சிறுமியின் வீட்டுப் பகுதியில் வெடித்ததால் இச்சிறுமி மிகவும் மோசமான எரிகாயங்களுக்குட்பட்ட நிலையில் வைத்தியர்களினால் சிகிச்சையளிக்க முடியாதென கூறிக் கைவிடப்பட்டாள்.
அச்சிறுமியின் 80 வீதமான உடற்பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தமையால் அவளுக்கான உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாதென வைத்தியசாலையின் டாக்டர்கள் தெரிவித்ததுடன், ஒரு முயற்சியாக தோல் நடுகை சிகிச்சையினை மேற்கொண்டனர். இதற்காக அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட 41 தோல் துண்டுகள் இச்சிறுமியின் முதுகு, முகம், மார்பகம், தோற்பட்டை, கால்களில் நடப்பட்டன.
இந்த செயற்கை முறையான நடுகைத் தோல்கள். அந்த குழந்தையின் உடலுடன் நன்றாக பதிந்து விட்டதாக மருத்துவர்கள் தற்போது தெரிவிக்கின்றனர்.
மருத்துவ நிபுணரான ரிட்வான் மியாவின் குழந்தையான பிப்பியின் உடலில் தோல்களை நடுவதற்காக செய்யப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
காயத்தின் வடுக்கள் இருக்கும். அதேவேளை சாதாரண தோல் நடப்பட்டாலும் அந்த வடுக்கள் நடப்பட்ட தோல்களை விட குறைவாக இருக்க வேண்டும்.
மூன்று வயதுச் சிறுமியான பிப்பியினுடைய புதிய தோல் ஒட்டுக்களானது வளருவதுடன், முன்னர் குழந்தை கோமாவில் இருந்த நிலையையும் மாற்றியுள்ளது. தற்போது அவள் விழித்து நன்றாக இருப்பதோடு விரைவில் வீடு திரும்ப முடியும் என்றார்.
பிப்பி என்ற அந்தச் சிறுமிக்கு அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட 41 குளோனிங் தோல் துண்டுகளை நடுகை முன்மாதிரி சத்திர சிகிச்சை மூலம் அவளுடைய முதுகு, முகம், மார்பு, தோற்பட்டை, கை, கால்களில் நடப்பட்டது.
உயர்சோதனையின் சிகிச்சையின் ஒரு பாகமாக பிப்பியின் உடலிலிருந்து பெறப்பட்ட தோல் கலங்கள் Boston Massachusetts இன் ஒரு ஒய்வு கூடத்தில் வைத்து வளர்க்கப்படுகிறது.
அந்தத் தோலானது, 2 cஇற்கும் 8 cஇற்குமிடையிலான வெப்பநிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு அது 24 மணித்தியாலம் உயிர் வாழக்கூடியது. மேலும் அமெரிக்காவிலிருந்து ஆபிரிக்காவிற்கான விமானப்பயணம் 21 மணித்தியாலங்கள் சுங்கம் என்பவற்றை கடந்து விமானம் தரையிறங்கி 16 நிமிடங்களில் வைத்தியசாலை அடைந்தது.
பிளாஸ்டிக் மற்றும் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரும், பிப்பியிற்கு ஜொஹானஸ்பேர்க் வைத்தியசாலையில் சிகிச்சையளித்தவருமான டாக்டர் ரிட்வான் மியாமலும் கூறுகையில்; அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்தன. நான் ஜனவரியில் இந்தக் குழந்தையை பார்த்த போது அவள் உயிர் பிழைப்பாள் என்று நம்பவில்லை. அவளின் உடல் காயங்களால் 3 மடங்கு வீங்கியிருந்ததாகவும் கூறினார்.
ஜனவரியில் இந்தச் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவள் நிமோனியா, சிறுநீரக செயலிழப்பு, இதய அடைப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாள். இறுதியாக வைத்தியர்கள் முயற்சி செய்ததால் அண்மையில் தோல் மாற்று சிகிச்சை செய்ய முடிந்தது. வைத்திய நிபுணரும் அவருடைய குழுவினரும் பிப்பியின் காயங்களை மறைப்பதற்குப் போதுமான தோலினை பயன்படுத்தினார்கள். அத்தோடு சிறுமியின் முகத்திற்கு Staplesஐ பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு வகையான தைக்கப்பட்ட உறிஞ்சும் பொருளை பயன்படுத்தினார்கள்.
புதிய தோலானது அவள் விபத்தின்போது காலுக்கிடையிலும் இடுப்பைச் சுற்றியும் அணிந்திருந்த ஆடையினால் மறைக்கப்பட்ட பகுதியிலிருந்தே பெறப்பட்டு சில தோல் துண்டுகள் குளோனிங் செய்யப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது.
இந்த மாதிரிகள் செல்களாக "Scaffold' போன்று பயன் படுத்தப்பட்டு தோல்கள் குளோனிங் செய்யப்பட்ட Bostonஇன் Genzyme ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது.
டாக்டர் மிஸா மேலும் கூறுகையில்; இந்த முயற்சி அல்லது படிமுறை அமெரிக்கா, ஐரோப்பி யாவிலேயே பயன் படுத்தப்பட்டது. ஆபிரிக்காவில் மிக அரிதாகவே பயன் படுத்தப்பட்டது. துருப்பிடிக்காத இரும்பிலான கொள்கலனோடு ஒரு கூரியர் 3040 வரையான நடுகைத் தோல்களைச் சுமந்த வண்ணம் வந்து சேர்ந்தது.
அந்தத் தோல்கள் மெல்லிய மென்மையான ஒளி புகக்கூடியதான அமைப்பில் காணப்பட்டதோடு அத்தோல்கள் விமான நிலையத்திலிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் ஜொஹானஸ்பேர்க் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அத்தோல்கள் உடலில் ஆய்வுக்குட்படுத்தியதிலிருந்து 24 மணித்தியாலத்துக்குள் நடப்பட வேண்டியதாக இருந்தது. சத்திர சிகிச்சை முடிந்தவுடன் சிறுமி பிப்பி சக்கர நாற்காலியில் வைத்து வெளியே கொண்டு வரப்பட்ட போது அவளுடைய தந்தை எர்வின் குர்கர் அவளின் மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் ; அனைத்தும் சிறப்பாக முடிவுற்றது. சத்திரசிகிச்சை முடிந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் பிப்பியின் உடலை சுற்றி போர்த்திய அமைப்பில் பாதுகாப்பாக ஆடை அணிவிக்கப்படுவாள். அவள் இரண்டு வகையான சவால்களை எதிர்கொண்டுள்ளாள்.
1. தொற்று நோயினால் பாதிக்கப்படல்
2. நடப்பட்ட தோல்கள் நெகிழ்வடைதல்
நடப்பட்ட தோல்கள் மென்மையானதாகவும் கிழியக் கூடியதாகவும் காயக்கூடியதாகவும் காணப்படுகிறது.
எரிகாயங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புனர்வாழ்வளிக்கும் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகரான பிரவுன் ஜோன் பிப்பியை எரிகாயங்களுக்குள்ளான குழந்தைகளில் அதிர்ஷ்டமான குழந்தை என குறிப்பிட்டுள்ளார்.
பிப்பியினுடைய மருந்துவ செலவுகளுக்காக அவளுடைய பெற்றோர் வலைப்பின்னல் மூலமாகவும் பணத்தை திரட்டினர். உண்மையில் 3 வயதுடைய இந்தப் பிப்பி ஒரு போராளி என டாக்டர் ரிட்வான் கூறினார் என்றும் டெய்லி மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment