ஜமாஅத்தே இஸ்லாமி இஜ்திமா நடாத்த நீதிமன்றம் அனுமதி - பொலிஸாரின் மனு நிராகரிப்பு
இக்பால் அலி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிரியால - தித்தவல்கால ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜமாஅத்தே இஸ்லாமியின் குருநாகல் கிளை ஏற்பாடு செய்திருந்த இஜ்திமாவை தடைசெய்யக்கோரி வெல்லவ பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு குருநாகல் நீதிவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
''நாடும் நாமும் நலம்பெற'' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஜ்திமாவை தடைசெய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தாஜுத்தீன் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து பொலிஸார் தித்தவல்கால ஜும்ஆ பள்ளிவாசலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இஜ்திமா சட்டவிரோத கூட்டமென்றும், இதனால் ஊரில் பாரிய பிரச்சினை ஏற்படுமென்றும் எனவே இஜ்திமா நடாத்த அனுமதிக்கக் கூடாதெனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட சட்டத்தரணி ரிஸ்வி ஜவகர்ஷா, ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு தீவிரவாத இயக்கம் அல்ல என்று நீதிமன்றத்தை தெளிவுபடுத்தினார்.
இதையடுத்து பொலிஸாரின் கோரிக்கையை ஏற்கமறுத்த நீதிமன்றம், திட்டமிட்டபடி இஜ்திமாவை நடாத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
Post a Comment