Header Ads



மண்கும்பான் (வெள்ளை கடற்கரை) பள்ளிவாசல் காப்பாற்றப்படுமா..? (படம்)


சலீம் மொஹிதீன்

சுமார் 420 வருட கால வரலாற்றை கொண்ட  மண்கும்பான் பள்ளிவாசல் யாழ்ப்பான முஸ்லிம்களின் பூர்வீக இருப்பை உறுதிப்படுத்துகிறது. சுமார் 100 பரப்பளவை கொண்ட பள்ளியின் நில உரிமையையும் கொண்டுள்ளது.

ஒஸ்மானியா கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.எம்.யூஸுப் B A  அவர்களின், பள்ளிவாசல் பூர்வீகம் பற்றிய நூலில் சுமார் 420 வருடமாக அங்கு சியாரம் உள்ளதாகவும், அதற்கு முன் தமிழ்நாடு கயல்பட்டினத்தை சேர்ந்த முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளாதகவும் எனவே அதற்கு மேற்பட்ட காலங்கள் முஸ்லிம்களின் வாழ்ந்த வரலாறு காணப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுளார்.

அங்குள்ள சியாரத்தில் அடங்கப் பட்டிருக்கும் இறை அடியார் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுளார். (கூடுதலாக சியாரங்கள் கடற்கரையை அண்டி இருப்பதும் இந்த வழிகேடு தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செயீப்பட்டுள்ளது என்பதை குறித்து நிற்கிறது)

நாம் இங்கு சொல்ல வருவது குறித்த சியாரமும் பள்ளிவாசலும் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தும் காரணிகளில் ஒன்றாக இருப்பதுதான்.

1950 வரை தனியார் ஒருவரின் சொத்தாக இருந்த பள்ளிவாசலும், அதன் சுற்றுப்புறமும் யாழ்ப்பான முஸ்லிம்களுக்காக பொதுச் சொத்தாக மாற்றப்பட்டது. அன்றிலிருந்து பரிபாலன சபை ஒன்று ஏற்படுத்தபட்டு நிர்வகித்து வந்தாலும் 1965 ஆண்டு யாழ்பாணத்தை சேர்ந்த தனவந்தர்களிடம் பரிபாலனம் ஒப்படைக்கப்பட்டது.

1968 ல் அப்பள்ளிவாசல் தற்போது இருக்கும் புதிய தோற்றத்தில் கட்டப்பட்டு வருடா வருடம் கந்தூரியும் நடைபெற்று வந்துள்ளது. 1968 வரை பள்ளியும் சியாரமும் ஒன்றாகவே இருந்துள்ளது. அதன்பின் தொழுகைக்காக தனியாக பள்ளிவாசல் ஒன்று உருவாக்கபட வேண்டும் என்ற நோக்கிலேயே சியாரத்தை விட்டு பிரித்து  பள்ளிவாசல் அமைக்கபட்டுள்ளதாக வரலாற்று நூல் ஆசிரியர் வலியுறுத்தி உள்ளார் (நூல் நம்மிடம் உண்டு) கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் இது அமைந்துள்ளது.

எனவே 1990 கு பின் கைவிடப்பட்டுள்ள அப்பள்ளியை புனருத்தாரணம் செய்யவும், பள்ளி சுற்றாடலை சீர்செய்யவும் வசதி படைத்தோர் முன்வர வேண்டும்.

அங்கு தற்போது சில குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களையும் அரவணைத்து யாழ் முஸ்லிம்களில் பெரியார்கள் இருப்பார்கள் அவர்களின் ஆலோசனையையும் பெற்று  அப்பள்ளியையும், அதன் சுற்றாடலையும் புனரமைத்து  உள்ளூர், வெளியூர், மக்கள் வந்து செல்லும் இடமாகவும் வசதிகளை அமைத்து, செயல்பட உலகில் பரந்துவாழும் யாழ் முஸ்லிம்களையும், மற்றும் சகோதர முஸ்லிகளையும் அன்புடன் அழைக்கிறோம்.

 இதை கைவிடுவோமெனில் மண்கும்பான் சாட்டி பகுதியை உல்லாச பிரயாண துறை கவந்துள்ளது. அது சிறிது சிறிதாக  இப்பூர்வீக பள்ளிவாசலை ஆக்கிரமித்து விடும் என்பதையும் ஒரு எச்சரிக்கையாக தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.  












9 comments:

  1. I was very glad to read this article. Actually It's a nice surprise for me to note that my late farther M.M. Yoosuf's book has been referred on the history of Mankumban Mosque. As a child, I know, my late father M.M. Yoosuf was in real love with this mosque, and that's the reason why he was induced by Late Refine Mohideen to write the history of this mosque.

    Unfortunately I don't have a copy of this book, I will be thankful if someone offer me a one.

    M. Yosuff Shihabdeen
    myshihhabdeen@yahoo.com

    ReplyDelete
  2. I agree, it should be reconstructed as soon as possible. otherwise we will loose this mosque by attacking some of religious leaders. If it is reconstruct we can see most of the Muslims in Mankumpan mosque area (not jaffna Muslim only)

    Thanks Mr. Saleem to having efficient with our community.

    Mohamed Riyas
    armriyas@yahoo.com

    ReplyDelete
  3. சின்னப்பள்ளிவாசலே புனரமைக்கப் படும் பொழுது, இந்தப் பள்ளிவாசலை கைவிடுவதா?

    பள்ளிவாசல் புனரமைக்கப் பட வேண்டும்.
    கட்டப் பட்ட கபுருகள் உடைக்கப் பட வேண்டும் என்பதற்கமைய,
    சியாரம் என்ற பெயரில் அறியப் படும் கல்லறை அகற்றப் பட்டு,
    அதன் எச்சங்கள் இருப்பின், மண்ணறைகள் உள்ள மையவாடிக்கு
    மாற்றப் பட வேண்டும்.

    சலீமுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. Please first stop warshipping this Avliya or this Qabr its is Shirk No need Kantoory just clean plsn Masjid much better

    ReplyDelete
  5. I don't think warships come to this area. It is not the matter of worshiping the ziyaram, but can be used as a base to gather and unite most of the scattered Jaffna Muslims, of course with a meal (Kanthoori).

    Human beings have no authority at all what so ever to decide shirk, evil etc. but ONLY Almighty Allah has it all on the day of judgement.

    ReplyDelete
  6. LEARN ISLAM BETTER,

    Please you first learn islam better before come in to comment in public forums.

    Allah has the authority, it is ok, but don't you know Allah has sent a prophet to guide all of us.

    The prophet has prohibited Ziyaram worship and bid'ath like kandoori.

    Please learn islam first.

    ReplyDelete
  7. You cannot differentiate the meaning of worshiping and visiting Ziyaram. if Visiting Ziyaram is Shrik, are millions of pilgrimage who visit Prophet's Ziyaram in Madina perform Shrik???

    Do you mean to say that no body is allowed to visit his parent's, relative's, or someone he respect's ziyaram and make Dua for them??

    What a stupidity to say that eating together with other Muslims is bidath. My suggestion was to unite all scattered Jaffna Mulsim at a place with a meal. You can call it by any name you want. That does't matter.

    ReplyDelete
  8. Kind attn; La voix

    I am still waiting for your answers to my questions. Pls publish your answers. If you can't, you have to delete your stupid comments & appoligize to public.

    myshihhabdeen@yahoo.com

    ReplyDelete
  9. To : Mr. M. Yosuff Shihabdeen (LEARN ISLAM BETTER),

    மிகத் தாமதமாகவே உங்கள் பதிலைப் பார்க்க நேரிட்டதட்கு வருத்தங்கள்.

    எனது கருத்தை வாபஸ் வாங்குவதற்கோ, வருத்தம் தெரிவிப்பதற்கோ எதுவுமில்லை. ஆனால் உங்களுக்கு அந்த நிலைமை கட்டாயம் ஏற்படத்தான் போகின்றது, இங்கே இல்லாவிட்டாலும், மறுமையில்.


    ஒரு முக்கிய வேண்டுகோள்:
    மூலக் கட்டுரை தமிழில் இடம் பெற்றுள்ளமை, நீங்கள் பதிலளித்துள்ள எனது கருத்துக்கள் தமிழில் பதியப் பட்டுள்ளமை மற்றும் ஆங்கில மொழிப் புலமைக் குறைபாடு காரணமாக உங்கள் கருத்துக்களை மிகத்தெளிவாக விளங்கி, சரியாக பதிலளிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக உங்கள் கருத்துக்களை தமிழில் பதியும்படி கேட்டுக்
    கொள்கின்றேன்.

    நீங்கள் தமிழில் உங்கள் கருத்துக்களை முன்வைக்குமிடத்து, இன்ஷா அல்லாஹ் பதிலளிக்கப் படும்.

    [ நீங்கள் விரும்பினால் தமிழில் கருத்துப் பதிய பின்வருவனவற்றில் ஒரு இணைப்பை கூட பயன்படுத்தலாம்.

    http://www.google.com/transliterate/tamil

    http://english-to-tamil-keyboard.appspot.com/]


    * இந்தப் பதில், நீங்கள் இங்கே வழங்கியுள்ள உங்கள் e mail இற்கும் அனுப்பப் படுகின்றது.


    Learn Islam better!

    ReplyDelete

Powered by Blogger.