சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மரண தண்டனை - சட்டக்கோவை தயார்
சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டங்கள் அடங்கிய கோவையொன்று தற்போது நீதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
அதில உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் திஸ்ஸ கரலியத்த சுட்டிக்காட்டுகின்றார்.
அதிகரித்துச் செல்லும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,600 க்கும் அதிகமான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Very very good this shuld include Politicians,Buddhist monks,security personnels,even police forces Are you ready?
ReplyDelete