இலங்கையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்கள் - அமெரிக்காவும் கண்டிக்கிறது
இலங்கையில் கடந்த ஆண்டு பல மதவழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்கள் மற்றும் கிறித்துவ சமூகத்தின் மீது கடந்த ஆண்டு பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதே போல பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கூட அங்கு பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளன என்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு பள்ளிவாசல் அழிக்கப்பட்டுள்ளது என்றும் பல பள்ளிவாசல்கள் மீது கற்கள் அல்லது எறிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன என்றும் அமெரிக்க அறிக்கை கூறுகிறது.
Post a Comment