ராஜினாமாசெய்த ஆஸாத் சாலி மட்டக்களப்பில் வேட்பாளராக குதிக்கிறார்
TM
கொழும்பு மாநகரச சபை உறுப்பினர் பதவியிலிருந்து அஸாத் சாலி ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலிடம் மாகையளித்தார். ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அஸாத் சாலி,
"மூன்று முஸ்லிம் கட்சிகள் அரசுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. இதனால் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரை பெற முடியாது. ஏனென்றால் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு இம்முறையும் முதலமைச்சர் பதவி தரப்படும் என அரசாங்கத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் முஸ்லிம் முதலமைச்சர் பதவியை இலகுவாக கைப்பற்றியிருக்கு முடியும். அவ்வாறில்லாவிடினும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருக்கலாம்.
எனினும் அவற்றை மேற்கொள்ளாமல் அரசாங்கத்துடன் சங்கமித்துள்ளது. இதனாலேயே கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதற்காகவே மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிடவுள்ளேன். கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ளோம். நான் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவேன்.
அரசாங்கத்திற்கு எதிரான மனோ கணேசனுடன் தனது சமூகத்தின் நலனிற்காக அமைச்சர் தொண்டமானினால் இணைந்து போட்டியிட முடியும் என்றால், ஏன் அரசாங்கத்திலுள்ள குறித்த மூன்று முஸ்லிம் கட்சிகளினதும் தலைவர்களினால் முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதற்காக போட்டியிட முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியிருக்கலாமே என ஊடகவியலாளரொருவர் வினவிய போது,
"தாக்கப்பட்ட தம்புள்ளை பள்ளிவாசல் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக உள்ளது என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்த போது, சுமார் 2 வருடங்களுக்கு முன்னரே குறித்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது என குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்தவிடம் எவ்வாறு இது தொடர்பில் பேசுவது" என பதிலளித்தார். அத்துடன், இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அஸாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
கடந்த கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அஸாத் சாலி, கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்ததுள்ளார்.
வாழ்வுக்கும் மறக்காத அவமானத்தை சுமக்க முடிவு செய்திட்டீங்களா என்ன??? உங்களுக்கு அங்கே ஆயிரம் வாக்குகள் விழுவது கூட கடினம்!!! உருப்படியா கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுகென தனியான கட்சி ஒன்றை ஆரம்பித்து கொழும்பு வாழ் முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவாருங்கள் ஐகிய தேசிய கட்சி என்றும் சுதந்திர கட்சி என்றும் கொழும்பு முஸ்லிம்கள் பிறிந்து நின்று என்ன இலாபத்தை கண்டார்கள் இனியாவது இலாபம் அடையும் வழியை காட்டு வீர்களா அதை விடுத்து நீங்க யார் என்றே அறியாத ஊருக்கு போய் என்ன பிரயோஜனம்???
ReplyDeleteஸலாம்.
ReplyDeleteசுய நலத்திற்காக அரசியல் நடத்தும் இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் இலங்கை முஸ்லீம்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாது என்பதே உண்மை. காரணம் மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக் கொள்ளும் இவரின் உண்மை முகம் கொழும்பு முஸ்லீம்களுக்கு நன்றாகத் தெரியும்.
கிழக்கு மக்களே இவருக்காக நீங்கள் போடும் ஒரு வாக்கு கூட உங்களுக்காக இவர் பேசுவார் என்ற நினைத்து போட்டு விடாதீர்கள். கண்டிப்பாக இவர் பேச மாட்டார் இதுதான் கடந்த காலம் நமக்குக் கற்றுத் தந்த சிறந்த பாடம்.
பொன்னான வாக்குகளை இது போன்ற கயமைக் காரர்களுக்கு போட்டு மண்ணாக்க வேண்டாம் என்று அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.
இவருடைய சமுதாய அக்கரை வேஷத்தைப் பாருங்கள். கொழும்பு மாநகர சபையில் தங்கள் இடத்தைத் தக்க வைக்க இவரும் மஹ்ரூபும் போட்ட தெருச் சண்டையின் காட்சியை பார்க்க இந்த லிங்கை சொடுக்குங்கள்.
http://www.youtube.com/watch?v=CCtzY_WbdSc