Header Ads



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய தீர்மானம் இன்று வெளியாகும்..?

TN

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இன்று செவ்வாய்கிழமை மாலை கூடி முக்கிய தீர்மானங்களை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக இறுதி முடிவைத் தீர்மானிக்கும் நிகழ்வாக இது அமையவுள்ளதுடன் கட்சியின் முடிவுகள் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்துடன் இணைந்து நிற்கும் முடிவாகவே இருக்குமெனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. அந்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி அம்பாறை மாவட்டத்தில் ஆறு ஆசனங்கள், மட்டக் களப்பில் 3 ஆசனங்கள், திருகோணமலையில் 3 ஆசனங்கள் என 12 ஆசனங்களை மு. கா. விற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் சக கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதிகள், இடங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் இழுபறி நிலையே உள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று செவ்வாய்கிழமை காலை ஐ. ம. சு. மு. பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் எட்டப்படும் முடிவுகளுக்கமைய இன்று செவ்வாய்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என நம்பப்படுகிறது

3 comments:

  1. SLMC இன் அதி உயர் பீடம் கூடி முடிவு அறிவிக்க வேண்டிய தேவை இல்ல சார்... எமது மக்களுக்கு மாகாண சபை கலயமுன்னமே அறிந்த விடயம் அதுதான் இந்த SLMC எந்த நிபந்தனையும் இன்றி அரசோடு சேர்ந்து மட்டும்தான் கேட்பார்கள் என்பது. அரசு எதுவும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை….. சரணாகதி அரசியல் என்றால் அவர்களுக்கோ நன்கு பரிட்சயம். அவேர்களுக்கு ஒன்றும் இது புதிதல்ல சார்….

    6 + 3 + 3 = 12 ஆசனங்கள் என்றால், அதிக வக்கடுத்தவர்களுக்கு முதலிடம் என்கின்ற அடிப்படை கோட்பாட்டுக்கு என்னவாகுமாம்? இவர்களின் பொய் பித்தலாட்ட பேச்சு இன்னும் மக்களுக்கும் புரிய வில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.....

    ReplyDelete
  2. Appo yaaru thaan sari
    Athavulla muslim samoohathukku enna saidu irukkirar (akkaraipathukku alla) rishad Muslim samoohathukku enna saidu irukkirar (Mannarukku alla) samooham entru parkadavalai ean makkal therindu kolla vendum. ivarhal ellorum piradesa vadam pidithavarhal. ivarhalukku thesiya arasiyalil entha pankum kodukka koodadu. avarhal naharasabakku than sariyanavarhal. appo than avarhal avarhaladu villagukku savai seyvarhal

    ReplyDelete
  3. piradesa vadiyai vida thesiyavadi sirantavar

    ReplyDelete

Powered by Blogger.