நீங்கள் சுயிங்கம் சப்புபவர்களா..? இதையும் வாசியுங்கள்..!
TL
சிலருக்கு எந்நேரமும் சுயிங்கம் மென்று கொண்டிருப்பது ஒரு வழக்கம். ஆனால் இப் பழக்கம், ஞாபக சக்தியை பாதிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.
இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட கார்ட்டிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்,
சுயிங்கம் பழக்கம் இல்லாதவர்களை விட, சுயிங்கம் பழக்கம் உள்ளவர்கள் எழுத்துக்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பதில் அதிக கஷ்டப்படுகின்றனர் என்கிறார்கள். சுயிங்கமை மெல்லும் போது ஏற்படும் அசைவு, தொடர்ச்சியான விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் மூளையின் திறனை பாதித்திருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
கை, கால் விரல்களை நொடிப்பது போன்று சுயிங்கம் மெல்லும் தொடர்ச்சியான செயல், நம்முடைய குறுகிய கால ஞாபகத்திறனில் குறுக்கிட்டு அதைப் பாதிக்கிறதாம். சுயிங்கம் குறிப்பாக குறிப்பிட்ட சுவை சேர்ந்த சுயிங்கம் ஒருவரின் திறனை ஊக்குவிக்கும் என்று முன்பு கூறப்பட்டதற்கு எதிராக தற்போதைய ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது.
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் மனிதர்கள் சொதப்பக்கூடியவர்கள் என்றும் மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அதற்கென ஆதாரங்களையும் முன் வைக்கின்றார்கள்.
ஆய்வாளர்களில் ஒருவரான கார்டிப் பல்கலைக்கழகத்தின் "மிஷ்சைல் கோஸ்லோவ்', "மூளைக்கு ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம், கவனக் குவிப்புகள் சுயிங்கம் உதவுகிறது' என்று ஆய்வுகள் வாதிட்டன.
ஆனால் வார்த்தைகள் சார்ந்த ஞாபகத்திறனில், சுயிங்கம் போன்று பகுதி செயல்படுகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம் என்று உறுதிப்பட கூறுகிறார்.
Post a Comment