Header Ads



ஈராக்கில் மீண்டும் வலிமை பெறுவோம் - அல்ஹைதா அறிவிப்பு

ஈராக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தை சேர்ந்தகளை விடுவிப்பதற்காக பல புதிய தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், ஈராக்கில் முன்பு இருந்ததை போல தங்கள் இயக்கம் மீண்டும் வலிமைபெறும் எனவும் அல்-கொய்தா இயக்கம் அறிவித்துள்ளது.

தன்னை அல்-கொய்தா இயக்கத்தின் தலைவராகக் கூறியுள்ள அபுபக்கர் அல்பக்தாதி, இதுபற்றிய ஆடியோ ஒன்றை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் ‘சுவர்களை உடைப்போம்’ என்ற பெயரில் புதிய தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

ஆனால் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ள குரல் யாருடையது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. கடந்த 2010-ம் ஆண்டில் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் ஆன அல்பக்தாதியின் குரல், தற்போதுதான் முதல்முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  

ஈராக்கின் அனைத்துப் பகுதிகளிலும் முன்பு இருந்ததைபோல அல்-கொய்தா இயக்கம் மீண்டும் வலிமை பெற, பழங்குடியின தலைவர்கள் உதவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.