காத்தான்குடி கடற்கரையில் அழகான குழந்தை (படம் இணைப்பு)
காத்தான்குடி கடற்கரையில் அனாதரவான குழந்தையொன்றை பொது மக்கள் கண்டெடுத்துள்ளனர். காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை இரவு 8.40மணியளவில்,அனாதரவாக கைவிடப்பட்ட குழந்தையொன்றை கண்டெடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த ஒருமாத குழந்தையொன்றை அந்த முச்சக்கர வண்டியின் சாரதியும் கடற்கரையிலிருந்த பொதுமக்கள் சிலரும் கண்டெடுத்து காத்தான்குடி நகர சபை தலைவருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர் நகர சபை தலைவர் எஸ்.எச் அஸ்பர் காத்தான்குடி பொலிசாருக்கு இந்தத் தகவலை வழங்கியதுடன் குழந்தைய காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிசார் வைத்தியசாலைக்கு சென்று குழந்தையை பொறுப்பேற்று அங்கிருந்து வைத்தியசாலையிலுள்ள சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு கொண்டு சென்றனர். இந்தக் குழந்தை தொடர்பான விசாரணை இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
Post a Comment