விண்வெளியில் இருந்தபடி சுனிதா வில்லியம்ஸ் வாக்கு போடுவார்..!
அமெரிக்கா மற்றும் சில நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளன. அங்கு 32 விஞ்ஞானிகள் தங்கி இருந்து விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சில மாதங்களுக்கு முன்பு விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்று 105 நாட்கள் தங்கி இருந்து விட்டு பூமிக்கு திரும்பினார்.
இப்போது இரண்டாவது முறையாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் ரஷ்ய வீரர் யூரியாலின் செங்கோ, ஜப்பான் வீரர் அகிஹிகோ ஹோஷிடே ஆகியோர் சோயுஸ் விண்கலம் மூலம் கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விண்கலம், சர்வதேச ஆராய்ச்சி மையத்தை நாளை சென்றடையும். இவர்கள் மூவரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 4 மாதம் தங்கி இருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வர். நவம்பர் மத்தியில்தான் பூமிக்கு திரும்புவார்கள்.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாத தொடக்கத்தில் நடக்கிறது. இந்த தேர்தலில் ஓட்டுப்போட சுனிதா வில்லியம்ஸ் ஆர்வமாக உள்ளார். எனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தபடி ஓட்டுப் போடுவதற்கான வசதி செய்யப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் அங்கிருந்தபடியே ஓட்டுப் போடுவார்கள்.
இரண்டாவது முறையாக விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ்க்கு விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-
இந்திய பெண்மணி ஒருவர் இரண்டாவது முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொண்டிருப்பது நமக்கு பெருமையாக உள்ளது. சர்வதேச சமூகம் இணைந்து பணியாற்றக் கூடிய ஒரு இடமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. அங்கு நீண்ட நாள் தங்கி இருந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவது மிகப்பெரிய சவாலான விஷயமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment