ஒஸாமா பின்லேடனுக்கு சமைத்துக் கொடுத்தவரை அமெரிக்கா விடுவித்தது
அமெரிக்காவால் கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனின் சமையல்காரர் இப்ராஹீம் அல்கவ்ஸி குவாண்டனாமோ சிறையில் இருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார் என்று சூடான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதம், சதித்திட்டம் ஆகிய குற்றங்கள் சுமத்தி 2000-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அல்கவ்ஸிக்கு 14 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
குவாண்டானாமோ சிறையை மூடப்போவதாக ஒபாமா தான் அதிபராக பதவியேற்கும் போதே அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பிற்கு பிறகு முதன் முதலாக விடுதலைச் செய்யப்படும் நபர் அல் கவ்ஸி ஆவார்.
1996-ம் ஆண்டு அல்காயிதாவில் உறுப்பினராக சேர்ந்தார் என கூறப்படும் அல்கவ்ஸி உஸாமாவின் சமையல்காரராகவும், கணக்காளராகவும் இருந்தாராம். 2010-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இதனை அல் கவ்ஸி ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்பட்டது. T
Post a Comment