இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை பாகிஸ்தானுக்கு எடுத்துச்செல்ல வேண்டுமா..?
இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முஸ்லிம் நாடுகளின் உதவிகளை ஏன் பெற்றுக்கொள்ளக்கூடாது என ஐக்கிய முஸ்லிம் உம்மா அமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இன்று எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசில் அங்கம் வகிக்கின்றன. அப்படியிருந்தும் முஸ்லிம்களுக்குரிய காணிப் பிரச்சினையோ, மீள்குடியேற்றமோ முற்றாகத் தீர்க்கப்படவில்லை. அமைச்சர் றிஸாத் மட்டும் முஸ்லிம்களுக்காகப் பேசி மீள்குடியேற்றம் நடக்கப்போவதில்லை அரசுக்கெதிராக ஜெனீவாவில் பிரோணை கொண்டுவரப்பட்டபோது முஸ்லிம் அமைச்சர்களும் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரும் ஒன்றுபட்டு ஒருகுரலில் பேசி அரசுக்கு ஆதரவு திரட்டிக்கொடுக்க முடியுமானால் ஏன் முஸ்லிம் அகதிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் மீள்குடியேயற்றத்தைச் செய்வதிலும் ஒன்றுபட்டு 22 வருடங்களாக அல்லல்படும் வடபுல முஸ்லிம்களின் பிμச்சினைகளைத் தீர்க்க முடியாது?
முஸ்லிம்களின் அதிக வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் விடயத்தில் ஏன் மௌனம் காக்கிறது. இக்கட்சி அரசில் அமர்ந்தது முஸ்லிம்களின் உரிமைகளைப் பெறுவதற்கா அல்லது அவர்களின் தனிப்பட்ட நலன்களைப் பேணுவதற்கா என்ற சந்தேகம் எம்மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது
தம்புள்ளயில் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினை ஏனைய இடங்களுக்கு பரவிக் கொண்டிருக்கிறது. பொறுப்புவாய்ந்த ஜம்இயத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி எமது பிரச்சினை சமாதானமாக முடிக்கப்பட்டது என்று கூறினார். எப்படியான சமாதானம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவிபபாரா?
தம்புள்ள பிரச்சினையில் விட்டுக்கொடுத்தால் தொடர்ந்து பல பள்ளிவாசல், மத்ரஸாக்கள் மூடப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கும். எமது அரசியல் வாதிகளுக்கு அரசுடன் பேசி நல்லதொரு முடிவை எடுக்க முடியாது எனத் தெரிந்தால் யுத்தத்தை வெல்வதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உதவிய பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கு எமது பிரச்சினையை எடுத்துச் சொல்வதற்கு எமது அரசியல் தலைவர்களினதும் ஜம்இயத்துல் உலமா போன்ற இயங்களினதும் கடமையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை பச்சையாக வேட்டியும் சுட்டும் கொல்லப்படும் சிரியா, மியன்மார் முஸ்லிம்களுக்காக எதுவும் செய்யத் திராணியற்ற
ReplyDeleteபெயர் தாங்கி முஸ்லிம் நாடுகள் நமது பிரச்சினையை கணக்கிலேடுக்குமா?