Header Ads



பௌத்த பிக்குகளின் நற்பெயருக்கும், கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படுத்த சதியாம்..!

பௌத்த பிக்குகளின் நற்பெயருக்கும், கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மிகவும் திட்டமிட்ட அமைப்புகள், பல இடங்களில் இருந்து கொண்டு மிகவும் சூட்சுமான முறையில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஒரு பிக்கு செய்யும் தவறுக்கு பெரும் பிரசாரத்தை வழங்கி, மக்கள் மத்தியில் பிக்குகளுக்கு எதிரான மனநிலையை தோற்று வித்து, கிராமத்திற்கும், விகாரைகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை துண்டிக்க சிலர் தருணம் பார்த்து காத்துள்ளனர்.

 பிக்கு ஒருவர் தவறு செய்தால், அதனை பொதுசமூகத்தில் பகிரங்மாக பேச சம்பிரதாயம் பண்டைய காலத்தில் இலங்கையில் இருந்த போதிலும் தற்போது, பிக்கு ஒருவர் செய்யும் தவறை அடிப்படையாக கொண்டு முழு பௌத்த பிக்குகளுக்கு எதிராக சேறுப்பூச நடவடிக்கைகளை சில ஊடக நிறுவனங்கள் மிகவும் சூட்சுமான முறையில் முன்னெடுத்து வருகின்றன எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அங்கொட ஹேனேவத்தை பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். gtn
 

No comments

Powered by Blogger.