இவர் தண்ணீருக்கு அடிமை
இங்கிலாந்தைச் சேர்ந்த இருபத்தாறு வயது இளம் தாயான சாஷா கென்னடி தண்ணீர் குடிக்கின்ற பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. இவர் ஒவ்வொரு நாளும் இருபத்தைந்து லீற்றர் தண்ணீர் குடிக்கின்றார். இவரால் ஒரு மணித்தியாலத்தில் ஒரு முறையேனும் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. இரவிலும் இதே நிலைதான்.
எனவே எந்த நேரமும் எங்கும் தண்ணீர் போத்தல்களை காவிக் கொண்டுதான் செல்கின்றார். அத்துடன் ஒரு நாளில் குறைந்தது நாற்பது தடவைகள் கழிவறைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.
இரண்டு வயதாக இருந்தபோது அடங்காத தண்ணீர்த் தாகம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர், தண்ணீர் என்று பெற்றோரை விடாமல் கேட்டு வந்திருக்கின்றார். வைத்தியர்களிடம் கொண்டு போய் பெற்றோர் காட்டி இருக்கின்றனர். ஆனால் எந்தவொரு கோளாறும் கிடையாது என்று சொல்லி வைத்தியர்கள் அனுப்பி விட்டனர்.
இவருக்கு ஆறு வயது ஆனது. இவரது படுக்கைக்கு அருகில் அம்மா ஒவ்வொரு இரவிலும் சில லீற்றர் தண்ணீர் வைப்பார்.
பாடசாலைக்கு தண்ணீர் போத்தல்களுடன் சென்றார். இடைவேளைகளின்போது ஏனைய பிள்ளைகள் விளையாடி மகிழ்வார்கள். இவரோ தண்ணீர்க் குழாயடிக்கு சென்று தண்ணீர் நிரப்பிக் கொண்டு இருப்பார். அதிலேயே நேரம் போய் விடும்.
இவருக்கு பதின்மூன்று வயது ஆனது. ஒவ்வொரு நாளும் பதினைந்து லீற்றர் தண்ணீர் குடிக்கலானார். இவருடைய படுக்கை அருகில் ஐந்து லீற்றர் தண்ணீர் கான் ஒவ்வொரு இரவிலும் வைக்கப்பட்டது.
இவருக்கு பதினாறு வயது ஆனது. பாடசாலை படிப்பை விட்டு விட்டு வேலைக்கு செல்ல தொடங்கினார். அலுவலகத்தில் இவருக்கு அருகில் தண்ணீர் கூலர் வைக்கப்பட்டது. இருபது வயது ஆனபோது இருபது லீற்றர் தண்ணீர் தினமும் குடிக்கலானார். ஆயினும் இவரது தண்ணீர் தாகம் உச்சம் அடைந்து கொண்டே செல்லல் ஆயிற்று.
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டிலிருந்து வீட்டில் இருந்தவாறு ரெலிகொம் நிறுவனம் ஒன்றுக்கு வேலை பார்த்து வருகின்றார். தற்போது ஒவ்வொரு நாளும் பதினெட்டு லீற்றர் முதல் இருபத்தைந்து லீற்றர் வரை தண்ணீர் குடிக்கின்றார். இவரால் இப்போது ஒரு நாளைக்கு ஆகக் கூடியது ஒரு மணித்தியாலமும் பதினைந்து நிமிடமும் வரை தொடர்ச்சியாக தூங்க முடிகின்றது. தண்ணீர் குடிக்கின்றமைக்கு அல்லது மலசலகூடத்துக்கு செல்கின்றமைக்காக நித்திரை விட்டு எழ நேர்வதாகவும் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
Post a Comment