Header Ads



எம்.எச்.எம். அஷ்ரப் ஓர் பிரச்சாரப் பொருளாகிவிட்டார் - அசாத்சாலி

முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டுமென கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் எம்.எச்.எம். அஷ்ரப்பை அரசியல் நலன்களுக்காக இலங்கை முஸ்லிம் கட்சிகள் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய முஸ்லிம் அரசியல் கட்சிகள் மறைந்த தலைவர் அஷ்ரப்பை ஓர் பிரச்சாரப் பொருளாகவே பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடங்கும் காலம் முதல் தேர்தலில் வெற்றியடையும் வரையில் தலைவர் அஷ்ரப்பை முழு அளவில் பிரச்சாரப்படுத்திக் கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அப்பாவி முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்தி அதன் மூலம் சுயலாப நோக்கங்களை அரசியல்வாதிகள் பூர்த்தி செய்து கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகள் எதற்கும் இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி உரிமை, மதத் தளங்கள், சுனாமி வீடமைப்புத் திட்டங்கள், மௌலவி நியமனங்கள், கரையோர நிர்வாக மாவட்டம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதான முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் கூட்டாக ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட முஸ்லிம் மதத் தலைவர்கள் வலியுறுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

GTN

1 comment:

  1. சரியாய் சொல்றிங்கா அசாத் அலி சேர் இவங்களுக்கு இதை வேலைய போச்சு காலம்சென்ற தலைவர் பத்தி பேசி ஒட்டு கேகளான இலங்கைல எந்த மாகாணத்திலும் இவர்களுக்கு இவர்களுக்கு ஒட்டு பிச்சை இல்ல எப்போது எங்கள் தலைவர் காலம்சென்று போனாரோ அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காலம் சென்று விட்டது இப்போது இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எல்லாம் சுயனலவதிங்கா கிழக்கு மண்ணில் இருந்து ரஹீம் .!

    ReplyDelete

Powered by Blogger.