Header Ads



வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற உதவி கோரல் (படங்கள் இணைப்பு)

செய்தி உதவி  - இர்ஷாத் றஹ்மத்துல்லா

பட உதவி -  ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

வடக்கிலிருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை காத்திரமான பங்களிப்பை ஆற்ற முன்வந்துள்ளது.

இற்றைக்கு 22 வருடங்களுக்கு முன்னார் வடக்கில் மன்னால், வவுனியா , முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டு காலம் கழிந்துள்ள நிலையில் இந்த முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தமது சகோதர முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் நாடுகளின் துாதுவர்களுக்கும் விளக்கமளிக்கும் வகையில் இன்று மாலை கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் கூட்டமொன்று இடம் பெற்றது.

அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ரஸ்வி முப்தி இந்த நிகழ்வின் தலைமை பொறுப்பபையேற்றிருந்தார். சிரேஷ்ட அமைச்சர ஏ.எச்.எம்.பௌசி, அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாருக், முத்தலிபாவா பாருக், உட்பட துறை சாரந்நவர்கள், புத்தி ஜீவிகள்,வசதி படைத்தவர்கள் என்று பலரும் வருகைத் தந்திருந்தனர்.

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அனீஸ், ஈரான் நாட்டின் முன்னால் துாதுவர் எம்.எம்.சுகைர்,பாராளுமன்ற உறுப்பினர் பாருக்.உட்பட பலர் இங்கு உரையாற்றினர்.

வடபுலத்திலிருந்து விரட்டப்பட்ட நாம் சொந்த மண்ணில்,நிம்மதியாக வாழ்வதற்கான கோறிக்கை என்னும் தலைப்பில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


















No comments

Powered by Blogger.