Header Ads



யாசர் அரபாத்தின் படுகொலையை பிரான்ஸ் நாடு அறிந்திருந்ததா..?



முன்னாள் பலஸ்தீன் அதிபர் யாஸர் அரஃபாத்தின் மரணம் தொடர்பான அனைத்து ரகசியங்களும் பிரான்சிற்கு தெரியும் என்று பிரான்சு நாட்டு பிரபல பத்திரிகையான le figaro கூறுகிறது.

மருத்துவமனையில் நடந்த காரியங்கள் எல்லாம் பிரான்சின் அதிகாரப்பூர்வ வட்டாரங்களின் அறிந்தே நடந்துள்ளது. இந்நிலையில் அவற்றை வெளியிடாமல் பிரான்சு அரசு சிலரின் விருப்பங்களை பாதுகாப்பதாக le figaro  குற்றம் சாட்டுகிறது.

2004-ஆம் ஆண்டு பிரான்சு ராணுவ மருத்துவமனையில் யாஸர் அரஃபாத்தை அனுமதித்த உடனேயே அவரது உடல் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மேலும் அவரது மரணத்திற்கு காரணம் இரத்த சிவப்பு அணுக்கள் அழிந்துவிட்டது என கூறப்பட்டது. ஆனால், ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணம் கூறப்படவில்லை.

ரேடியோ ஆக்டிவ் விஷப் பொருளான பொலோனியம் இரத்தத்தில் கலந்ததால் சிவப்பு அணுக்கள் குறைந்தன. இதுபோன்ற ஏராளமான ரகசியங்கள் பிரஞ்சு வட்டாரங்களுக்கு தெரியும் என்று le figaro கூறுகிறது.

1 comment:

  1. americca franss isrealin kootu sathiyileye antha paalaivana singam veelthapattathu..

    ReplyDelete

Powered by Blogger.