ஊடக ஒழுங்கு விதிகள் கோவை பாராளுமன்றத்திற்கு வருகிறது
TN
வெகுஜன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சு ஊடக ஒழுங்கு விதிகள் கோவையை இப்போது தயாரித்து முடித்துள்ளது.
இந்தக் கோவை மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், இதற்கு அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி எதிர்க்கட்சியினரும் தங்கள் ஆதரவை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் டபிள்யு.பீ. கணேகல தெரிவித்தார்.
பாராளுமன்றம் இந்த ஊடக ஒழுங்குவிதிகள் கோவையை அங்கீகரித்த பின்னர் அது அநேகமாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஒரு சட்டப்பிரமாணமாக பிரகடனம் செய்யப்படலாம் என்றும் கணேகல அறிவித்தார்.
அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுடன் இணையத்தளங்களும் இந்த சட்டப்பிரமாணத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது சில பத்திரிகைகள் தவறான செய்திகளை பிரசுரித்து மக்களைக் குழப்பும் வேலைகளில் ஈடுபடுகின்றன என்றும், பத்திரிகைகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதையும் ஓரளவுக்கு கண்காணிக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
Post a Comment