Header Ads



வர்க்கபேதங்களைப் பேசுவவது முட்டாள்தனமானது - வெலிமடை பௌத்த குரு

மொஹமட் ஹபீஸ்

சர்வமத ஒற்றுமையை வழியுறுத்தி எசல போயாதினமான இன்று (3.7.2012) இந்து ஸ்வம் சேவா சங்கம், கண்டி வைத்திய சாலையில் இரத்ததான நிகழ்வு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது.

மேற்படி இரத்ததான நிகழ்வில் இந்திய உதவித் தூதுவர் ஏ.நட்ராஜன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். விஷேட பேச்சாளராக பிரபல பௌத்தமத குருவான வெலிமட தம்ம கவேசி ஹிமிபானன் கலந்து உரையாற்றினார்.  அவர் அங்கு தமிழ் மொழியில் உரையாற்றிய போது தெரிவித்ததாவது,

எவன் ஒருவனாவது இன, மத, குல, மொழி, வர்க்கபேதங்களைப் பேசுவானாயின் அவன் ஒரு முட்டாள் என்றார். ஏனெனில் ஒரு அரச சேவையாளன் தனது பணியை முன்னெடுக்கும் போது அவன் பேதங்களைக் கவணிப்பதில்லை. விசேடமாக சுகாதாரத்துறையைச் சேர்ந்த டாக்டர்களோ, தாதியர்களோ அல்லது சிற்றூழியர்களோ இன,மத பேதங்களுக்கு ஏற்ப வைத்தியம் செய்வதில்லை. அதே போல் இரத்ததானம் போன்றவற்றிலும் பேதங்களைக் கருத்திற் கொண்டு வழங்குவதுமில்லை. பெற்றுக் கொள்வதுமில்லை.

நான்கு வகையான குருதி மாதிரியைத் விஞ்ஞான முறைப்படி பாகுபடுத்த முடியுமே தவிர வேறு எது வித வித்தியாசத்தையும் வெற்றுக்கண்ணால் பார்க்க முடியாது. எனவேதான் பேதங்கள் பற்றிப் பேசுபவன் சுத்த முட்டாளாகும் என்று கூறுகின்றேன். ஒருமனிதன் தானம் செய்ய வேண்டும்.தர்மம் செய்யவேண்டும். பின்னர் தியானம் செய்யவேண்டும். இதுவே மனித வாழ்வின் இலட்சியமாகவேண்டும்.

உலகிற்கு புத்த தர்ம போதனையை கொண்டு வந்த புனித தினம்தான் இன்றைய எசல போயா தினமாகும். எனவே இப்படியான தர்ம நிகழ்வுகளை வரவேற்கின்றேன் என்றார்.

வைத்திய சாலையில் ஒருமனிதனின் உயிர் பிரியும் போது அவன் எதிர்கொள்ளும் இன்னல்களை நாம் அனுபவித்தபின்தான் உணரமுடியும். ஆதை வார்த்தைகளால் ற முடியாது. ப்படியான இக்கட்டான ஒரு நேரத்தில் ஒருவன் பக்கத்தில் இருந்து உதவி செய்வாயின் அதனால் அந்நோயாளி அடையும் ஆருதல் விபரிக்க முடியாத ஒன்று. அப்படியான பாக்கியம் வைத்தியர்களுக்கும் தாதிமாhர்களுக்குமே அதிகம் உண்டு. எனவே வைத்தியத் துறை சார்ந்தவர்கள் செய்வது ஒரு தொழில் அல்ல.அதற்கு மேலாகவும் ஒன்று உண்டு. அதுதான் நோயாளியின் உள்ளத்தை அவன் மரணிக்ககும் போது மகிழ்விக்கும் பாக்கியமாகும் என்று நல்லாசி வழங்கினார்.





No comments

Powered by Blogger.