கிழக்கு தேர்தல் - ஆளும் கட்சிக்குள் இழுபறி - முதலமைச்சருக்கு மும்முனை போட்டி
எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வேட்புமனு கோரும் தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அஙகு போட்டியிடும் கட்சிகள் தத்தமது கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்சியினை யார் பெற்றுக் கொள்வது என்ற போட்டி எழுந்துள்ள நிலையில்,முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற சர்ச்சைகளும் எழாமல் இருக்கவில்லை. குறிப்பாக ஆளும் கட்சியில் எந்தெந்த கட்சி போட்டியிடும் என்பது இன்னும் தெளிவில்லாத நிலையே காணப்படுவது தற்போது கிழக்கில் இருந்து வெளிவரும் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்த முடியுமாக இருக்கின்றது.
கடந்த மாகாண சபை தேர்தலை போன்று இம்முறை நடைபெறப் போகும் கிழக்கு தேர்தலில் அரசங்கத்தில் அங்கம் கொண்டுள்ள சிறுபான்மை கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் சில இறுக்கமான தீர்மானங்களை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன.அரசாங்கத்துடன் புதிதாக இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தற்போது மீண்டும் தமது வழமையான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும்,அதற்கு கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் கொடுக்கும் அளுத்தமே காரணம் என கூறியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசில் இருந்து விலகி தனித்து அல்லது பொது முன்னணி ஒன்றில் போட்டியிடுவது குறித்து தமது மந்திர ஆலோசனைகளை பறிமாறிக் கொள்ளும் கூட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.கட்சியின் சில உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கேட்க வேண்டும் என்ற கோஷங்களை முன்வைத்துள்ள போதும் அது அந்தளவுக்கு எடுபடும் ஒரு கருத்தாக இல்லை என்றும் அவர் கூறினார்.
கிழக்கினை பொருத்த வரையில் ஜக்கிய தேசிய கட்சியினை முன்னெடுத்து செல்லும் அளவுக்கு கட்சிக்கு வலு சேர்க்கும் அரசியல் தலைமைத்துவம் இன்மையால்,கிழக்கு தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதானது தமக்கு தாமே தோல்வியினை உறுதிப்டுத்திக் கொள்ளும் செயலாகும் என்பதில் சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதை கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான ஒரு நிலையில் ஆளும் கட்சியில் இணைந்து கேட்பது தான் எல்லா கட்சிகளுக்கும் பொருத்தம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில்,முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் யாரென்பதை தெரிந்து எடுப்பதில் தான் சலசலப்பு காணப்படுகின்றது.அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கமான கட்சியாக அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இருந்து வருகின்றது.
தமது கட்சி இம்முறை அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதாகவும்,அதில் பிரதான கோறிக்கையாக முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வழங்கப்பட வேண்டும்,கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் தம்மை தாமே ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தை சுட்டிக்காட்டி அறிக்கைகளையும் விட்டிருந்த்தை பார்க்க முடிகின்றது.
அதே வேளை கிழக்கில் உள்ள பல உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிடம் இருப்பதானது,தமது கட்சி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சரின் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்ப்பட்டிருந்தது.இதே போல் அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பிரதம அமைப்பாளராக முன்னால் அமைச்சர் மயோன் முஸ்தபாவின் மருமகனான யஹ்யாகான் கட்சி பணிகளை முன்னெடுத்துவருகின்றார்.
இவர் கிழக்கு மாகாண முன்னால் அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் இணைப்பு செயலாளராகவும் பணியாற்றிவருகின்றார். அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்த வரையில்,முன்னால் அமைச்சர் அமீர் அலி பிரபலமான ஒருவராகவும்,கிழக்குக்கு நன்கு பரீட்சையமான ஒருவராகவும் இருப்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது.அதே போல் முன்னால் அமைச்சர் சுபைர், அத்தோடு, பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா, உள்ளிட்ட பல மாகாண அரசியல் பலங்கள் அங்கிருப்பதும் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலிசாஹிர் மௌலானாவை முதன்மை வேட்பாளராக நிறுத்தவுள்ளது என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்து சென்றது ஏனைய கட்சிக்குள் விமர்சனத்தை தோற்றுவித்திருக்கின்றது. அதேபோல் கிழக்கில் முதலமைச்சராக இருந்த பிள்ளையான் என்னும் சிவநேசத் துறை சந்திரகாந்தன் தான் தான் இம்முறையும் முதலமைச்சர் என்பதை உறுதியாக கூறியுள்ளார்.
இவ்வாறான கருத்துக்களுக்கு மத்தியில் அரச கட்சிக்குள் இழுபறி நிலையேற்பட்டுள்ள நிலையில்,அரசாங்கம் புதிய தொரு நெருக்கடியினை சந்திக்க நேரிட்டுள்ளது.எது எப்படி இருந்த போதும்,தற்போது ஸ்ரீலாங்க சுதந்திர கட்சி தமது வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சையினை கொழும்பில் நடத்த ஆரம்பித்துள்ளது.
இதில் முன்னால் முதலமைச்சர்கள் உட்பட சகலரும் நேரமுகப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற கட்டாயத்தை கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மைதிரிபால சிறசேன தெரிவித்தள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment